“மாரி செல்வராஜ் கூட இப்படி ஒரு படம் பண்ணனும்..” வடிவேலு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..

மாமன்னன் படத்தில் நடித்தது குறித்து வடிவேலு பகிர்ந்த தகவல் –vadivelu share maamannan movie experience | Galatta

தமிழ் சினிமாவில் ஆக சிறந்த நடிகர்களில் ஒருவர் வைகை புயல் வடிவேலு. துணை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகாகி பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் பின் முழு காமெடி நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்படி பல திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். பல தசாப்தங்களாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்த வைகை புயல் வடிவேலு தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாகவிருக்கும் ‘மாமன்னன்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மாறுபட்ட கோணத்தில் நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்ப்பார்பின் மத்தியில் வடிவேலு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மாமன்னன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை மாமன்னன் படக்குழுவினர் நமது கலாட்டா பிளஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டனர். இதில் வடிவேலுவிடம் இது போன்ற கதாபாத்திரங்களில் இன்னும் நடித்திருக்கலாமோ என்று நினைத்ததுண்டா என்று கேட்கையில் அதற்கு அவர்,   

"இது போன்ற எதார்த்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற பசி எனக்கு இருக்கு.. ஒரு படத்தில் வரும் கதாபாத்திரங்களின் அளவை தாண்ட கூடாது அதை நான் எப்போது பயிற்சியாக எடுத்து கொண்டேன். அது நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலமாக தான் கிடைத்தது. 

கார் ஓட்றதும் காமெடி பன்றதும் ஒன்று.. கொஞ்சம் மிஸ் ஆனா சரி வராது.. அதுக்கு பயிற்சி தேவைப்படும். எனக்கு நகைச்சுவையில இருந்து வந்ததால எனக்கு இது போன்ற கதாபாத்திரம் நடிக்க எளிதாக இருந்தது.  இவர் கொடுத்த கதாபாத்திரம் எனக்கு கச்சிதமா பொருந்தி போச்சு.. என் வாழ்க்கையில் அடிபட்ட காலுக்கு சிகிச்சை செய்தது போல இருந்தது‌.‌ எனக்கு பிடிச்சது. இதுக்கு மேல ஒரு கதை வந்தா  கண்டிப்பா நான் பண்ணுவேன். ஆனா இதுக்கு மேல வரனும். நானும் மாரி செல்வராஜ் கிட்ட அப்படி ஒரு படம் ஒண்ணா பண்ணுவோம் னு கேட்ருக்கேன்.  

எனக்கு பள்ளி படிப்பு கிடையாது. இவருக்கு பள்ளி படிப்பு, அனுபவ படிப்பும் இருக்கு அதனால் இவர் எல்லாமே செய்கிறார். நமக்கு அனுபவம் படிப்பு மட்டும்தான் தான். அதனால் ரிக்ஷா காரன், குதிரை வண்டிக்காரன் அவங்களோட விஷயங்களை நான் பார்த்து உள்வாங்கிடுவேன். அதை படத்தில் கொண்டு வந்துவிடுவேன். இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.." என்றார் வடிவேலு.

மேலும் மாமன்னன் படக்குழுவினர் மாமன்னன் படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான  தகவல்கள் கொண்ட வீடியோ உள்ளே..

பிரபாஸின் பிரம்மாண்ட Pan India படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்.. – Project K படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ..!
சினிமா

பிரபாஸின் பிரம்மாண்ட Pan India படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்.. – Project K படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ..!

வைகைப்புயல் உடன் இணைந்து பாடிய இசைப்புயல்... மாமன்னன் ராசா கண்ணு பாடலின் புது வெர்ஷன்! வைரல் வீடியோ உள்ளே
சினிமா

வைகைப்புயல் உடன் இணைந்து பாடிய இசைப்புயல்... மாமன்னன் ராசா கண்ணு பாடலின் புது வெர்ஷன்! வைரல் வீடியோ உள்ளே

“மாரி செல்வராஜ் மேடையில பேசுனது இதுதான்..
சினிமா

“மாரி செல்வராஜ் மேடையில பேசுனது இதுதான்.." உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..! – Exclusive Interview உள்ளே..