“இதனால் தான் மாமன்னன் படத்தில் நடிக்க வந்தேன்.,” உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ் - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

மாமன்னன் படத்தில் இணைந்தது குறித்து கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல் - Keerthi suresh about mari selvaraj maamannan | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது பல படங்களில் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நானியின் ‘தசரா’ திரைப்படம் இந்திய அளவு கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன்பின்னர் தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் சிரஞ்சீவி படமான ‘போலா ஷங்கர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் ‘சைரன்’ என்ற படத்திலும் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ மற்றும் ‘ரகு தாத்தா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் இயக்குனர் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வைகை புயல் வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வரும் ஜூன் 29ம் தேதி மாமன்னன் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு நேர்காணலில் நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் படக்குழுவினருடன் கலந்து கொண்டு மாமன்னன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் கீர்த்தி சுரேஷ் முன்னதாக தமிழில் நடித்து வெளியான ‘சாணி காகிதம்’ படத்திற்கும் மாமன்னன் படத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இதில் நடிக்க வந்த காரணம் என்ன என்று கேட்கையில்,

அதற்கு அவர், “மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவு. என்னை கேட்கும் போது நான் நமக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் அதில் இருக்கும் என்று நினைத்தேன். அதன்படி நான் அதை ஏற்று கொண்டேன்.

சாணி காகிதம் படம் நான் இதற்கு முன் பண்ணாத கதை. வித்யாசமான கதை களம் அது. அதனால் தான் நான் அவரிடம் நான் எப்படி இந்த கதையில் பொருந்துவேன் என்று கேட்டேன்.  அவர் சொன்னார், "நான் உங்களை இது போன்ற கதாபாத்திரங்களில் பார்த்ததில்லை. இது போன்று முரட்டு தனமான கதையிலும் நான் பார்த்ததில்லை. அதனால் தான் நான் உங்களை தேர்ந்தெடுத்தேன்." என்றார்.

 

இந்த படத்தில் ' நான் கம்யூனிஸ்ட் கதாபாத்திரம் வருகிறேன்.‌ இதுபோலவும் நான் நடித்ததில்லை. ஆனா மாரி என்னிடம் கேட்கும்போது எனக்கு தெரிந்தது அந்த கதையில் எனக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கும் என்று அதனால் நான் ஒப்புகொண்டேன். யாரா இருந்தாலும் அவர் படத்தில் நடிக்க உடனே முன் வருவார்கள். அதில் எனக்கு சந்தேகமே இல்லை.. என்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்

மேலும் மாமன்னன் படக்குழுவினர் மாமன்னன் படம் குறித்து நமது கலாட்டா பிளஸ் சிறப்பு நேர்காணலில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..

‘மாமன்னன்’ படத்தில் ஏன் சந்தோஷ் நாராயணன் இல்லை..? உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின்.. – Exclusive Interview உள்ளே..
சினிமா

‘மாமன்னன்’ படத்தில் ஏன் சந்தோஷ் நாராயணன் இல்லை..? உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின்.. – Exclusive Interview உள்ளே..

“இந்திராதான் இந்தியா..” ஜிவி பிரகாஷ் இசையில் கங்கனா ரனாவத்..! – எமர்ஜென்சி பட ரிலீஸ் தேதியுடன் வெளியான அட்டகாசமான வீடியோ உள்ளே..
சினிமா

“இந்திராதான் இந்தியா..” ஜிவி பிரகாஷ் இசையில் கங்கனா ரனாவத்..! – எமர்ஜென்சி பட ரிலீஸ் தேதியுடன் வெளியான அட்டகாசமான வீடியோ உள்ளே..

ஒடிடி ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வீரன்’ திருவிழா பாடலின் வீடியோ..! – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

ஒடிடி ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வீரன்’ திருவிழா பாடலின் வீடியோ..! – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ உள்ளே..