"பரியேரும் பெருமாள், கர்ணன், மாமன்னன்.. வித்யாசம் இது தான்.." மாரி செல்வராஜ் பகிர்ந்த அட்டகாசமான தகவல் – Exclusive Interview உள்ளே..

தன் திரைப்படங்களில் உள்ள வேறுபாடுகள் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல் - Mari selvaraj about Diffrences between his own films | Galatta

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உதயநிதி ஸ்டாலின்,  வைகை புயல் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பும் கூடி கொண்டே வருகின்றன. பரியேரும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களுக்கு பின் மார் செல்வராஜ் இயக்கும் இந்த படமும் அதே போன்ற சமூக பிரச்சனையை பேசும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது. அதன்படி மாமன்னன் படத்தின் டிரைலர் முன்னதாக வெளியானது. பரியேரும் பெருமாள் கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் நிறைய ஒற்றுமைகளை ரசிகர்கள் கவனித்து தற்போது பேசி வருகின்றனர்/

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து அப்படத்தின் நாயகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாமன்னன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் மாரி செல்வராஜ் திரைப்படங்கள் மூலம் இது தான் நீங்கள் சொல்ல வரும் தத்துவமா? மற்றும் முந்தைய படங்களுக்கும் மாமன்னன் படத்திற்கும் உள்ள ஒற்றுமை குறித்து கேட்கையில்,  

"மாரி செல்வராஜ் தத்துவம் என்று இந்த படங்களை வைத்து கண்டு பிடிக்க முடியாது. அவ்ளோ எளிதா ஒரு கலைஞனோட சித்தாந்தை எல்லா படத்திலும் தேடிட்டு இருக்க முடியாது.  ஒரு கதாபாத்திரத்தை எழுதும் போது அந்ந கதாபாத்திரத்திற்கே உரிய ஒரு அறிவு இருக்கு அந்த கதாபாத்திரம் எது செய்யுமோ அதை தான் செய்யும். அது செய்வதன் வடிவம் என்னவேணா இருக்கலாம். அது வன்முறையா இருக்கலாம், பேச்சுவார்த்தையாக இருக்கலாம் இல்ல மௌனமா இருக்கலாம். ஆனா ஏன் எதற்கு எதை அடைகின்றது என்பது தான் முக்கியம்.

மாரி செல்வராஜ் நான் அந்த கதாபாத்திரத்தின் நோக்கத்தை தான் பார்க்கிறேன் .‌ அதனால் என் தத்துவமா எதையும் சொல்ல முடியாது.

ஒவ்வொரு படத்தின் சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறும். கர்ணன் ஒரு மக்களுடைய கதை. பரியேரும் பெருமாள் ஓரு தனிப்பட்ட மனிதனின் கதை. மாமன்னன் ஒரு குடும்பத்தின் கதையா மாறும். அந்தந்த கதைதான் முடிவு பண்ணும். என்றார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அதை தொடர்ந்து பேசிய வடிவேலு, "அரசியல்குள்ள குடும்பம், குடும்பத்துக்குள்ள அரசியல் அது தான் கதையோட மையக்கரு" என்றார் வடிவேலு

மேலும் மாமன்னன் படக்குழுவினர் மாமன்னன் படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான  தகவல்கள் கொண்ட வீடியோ உள்ளே..

வைகைப்புயல் உடன் இணைந்து பாடிய இசைப்புயல்... மாமன்னன் ராசா கண்ணு பாடலின் புது வெர்ஷன்! வைரல் வீடியோ உள்ளே
சினிமா

வைகைப்புயல் உடன் இணைந்து பாடிய இசைப்புயல்... மாமன்னன் ராசா கண்ணு பாடலின் புது வெர்ஷன்! வைரல் வீடியோ உள்ளே

“மாரி செல்வராஜ் மேடையில பேசுனது இதுதான்..
சினிமா

“மாரி செல்வராஜ் மேடையில பேசுனது இதுதான்.." உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..! – Exclusive Interview உள்ளே..

சினிமா

"வேற லெவல் சார் நீங்க..!"- வைரலான ராவடி பாடல் மீம் வீடியோவை RECREATE செய்த ARரஹ்மான்... ட்ரண்டாகும் இன்ஸ்டாகிராம் REEL இதோ!