பிரபாஸின் பிரம்மாண்ட Pan India படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்.. – Project K படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ..!

பிரபாஸின் பிரம்மாண்ட Pan India படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் வைரல் வீடியோ உள்ளே - Kamal haasan joins prabhas project k movie | Galatta

இந்திய சினிமாவில் ஆக சிறந்த கலைஞராக பல தசாப்தங்களாக ரசிகர்களை உற்சாகப் படுத்தி வரும் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன். குழந்தை நட்சத்திரமாக நடித்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் கதாநாயகனாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த கமல் ஹாசன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூட்டணி அமைத்து நடித்த உலகநாயகன் கமல் ஹாசன் இந்திய அளவு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்து திரையுலகினரை வியக்க வைத்தார். விக்ரம் திரைப்படம் கமல் ஹாசன் திரைப்படத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் இந்தியன் 2 வெளியாகவுள்ளது. இதையடுத்து இயக்குனர் மணிரத்தினம் உடனான கூட்டணியில் ‘KH 234’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கமல் ஹாசன். இதனிடையே அஜித் குமாரின் துணிவு பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசன் இந்திய சினிமாவே எதிர்பார்த்து நிற்கும்பிரபாஸின் புரோஜக்ட் கே என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த அறிவிப்பினை படக்குழு சிறப்பு வீடியோவாக தற்போது வெளியிட்டுள்ளது. இதையடுத்து மிகப்பெரிய அளவு இந்த அறிவிப்பு வீடியோ இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. முன்னதாக பிரபாஸின் புரோஜக்ட் கே என்ற படத்தில் கமல் ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது, அந்த வகையில் சிகப்பு ரோஜாக்கள், ஆளவந்தான், தசாவதாரம் படத்திற்கு பின் உலகநாயகன் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கவிருக்கும் படமாக இது அமையும் என்பது குறிப்பிடதக்கது.

வைஜெயந்தி மூவிஸ் தாயரிப்பில் இந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் ‘புரோஜக்ட் கே’ திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கின்றார். மேலும் படத்தில் அமிதாப் பச்சன், தீஷா பட்டாணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். கடந்த 2018 ல் வெளியாகி தேசிய அளவு வரவேற்பை பெற்ற பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த ‘நடிகையர் திலகம்’ பட இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கி வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜோர்ஜே ஸ்டோஜில்கோவிக் ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு பின்னணி இசையமைக்கின்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். Sci Fi கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த சுவாரஸ்யமான விஷயங்கள் கூடி வருவதால் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரும் பகிர்ந்து வருகின்றனர்.

 

A moment that will be etched in my heart forever. Honored beyond words to collaborate with the legendary @iKamalHaasan sir in #ProjectK. The opportunity to learn and grow alongside such a titan of cinema is a dream come true moment - #Prabhas via Instagram.… pic.twitter.com/mKkJkWIe6F

— Prabhas (@PrabhasRaju) June 25, 2023

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் புரோஜக்ட் கே திரைப்படம் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி உலகமெங்கும் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.

சினிமா

"வேற லெவல் சார் நீங்க..!"- வைரலான ராவடி பாடல் மீம் வீடியோவை RECREATE செய்த ARரஹ்மான்... ட்ரண்டாகும் இன்ஸ்டாகிராம் REEL இதோ!

வரிசையாக கைவசம் அசத்தலான படங்கள் - புதிய வெப் சீரிஸ்... அடுத்தடுத்த திட்டங்களை பகிர்ந்த வாணி போஜனின் சிறப்பு பேட்டி!
சினிமா

வரிசையாக கைவசம் அசத்தலான படங்கள் - புதிய வெப் சீரிஸ்... அடுத்தடுத்த திட்டங்களை பகிர்ந்த வாணி போஜனின் சிறப்பு பேட்டி!

விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு பட சர்ப்ரைஸ்... கவனிக்க வைத்த விறுவிறுப்பான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு பட சர்ப்ரைஸ்... கவனிக்க வைத்த விறுவிறுப்பான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!