“நான் இன்னும் நினைத்ததை பேசக்கூடிய இடத்துக்கு வரல..” உடைந்து பேசிய ‘மாமன்னன்’ இயக்குனர் மாரி செல்வராஜ் – Exclusive Interview உள்ளே..

மாமன்னன் இசை வெளியீட்டு விழா நிகழ்வு குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல் - Mari selvaraj about kamal haasan devarmagan movie | Galatta

வரும் ஜூன் 29 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முன்னதாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான படத்தின் பாடல்களும் மற்றும் படத்தின் டிரைலரும் படத்திற்கான எதிர்பார்பையும் ஆவலையும் மேலும் கூட்டியது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து அப்படத்தின் நாயகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாமன்னன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் மாமன்னன் பட இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பேசுகையில்,

"சமூக வலைதளங்களில் பார்த்தால் நான் இன்னும் நான் நினைத்ததை பேசக்கூடிய இடத்திற்கு வரவில்லை. அன்று மேடையில் கமல் சார் முன்னிலையில் பேசியது என் உணர்வு அதை உள்வாங்கி கொண்ட விதம் வேற மாதிரி இருக்கு.. அப்போ நான் நினைச்சதை நினைச்சா மாதிரி பேச முடியல ங்கறது இருக்கு.. அது என் உரிமை.. என் உணர்வு.. அதை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவமான கலைஞன் கமல் சார். அந்த நேரம் அது ரொம்ப உணர்ச்சிவசமான தருணம்‌.‌  சினிமா சார்ந்த பிரச்சனைனா அதை எளிதாக பேசிட முடியும். அதை யாரும் கண்ணு கொண்டிருக்க மாட்டார்கள். இது ஒரு குறிப்பிட்ட விஷயம் சார்ந்த பிரச்சனை என்பதால் அதை பேச முடியவில்லை.

இதை பேசிய பிறகு வெளியே 30 வருடம் கழித்தும் கூட ஒரு இயக்குனரா 2 படங்கள் எடுத்த பின்பும் கூட மாமன்னன் படத்தை கமல் சாரிடம் போட்டு காட்டிய பின்பும் கூட நான் பேசியது வேற மாதிரி பார்க்கபடுகிறது என்பது வருத்தமாகதான் இருக்கின்றது. எனக்கு தெரியாதா? கமல் சார் யாருனு.. அவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்று தெரியாதா?.. ஆனால் நான் பேசியது உணர்வுபூர்வமான உண்மை.

நான் 14 வருஷம் முன்னாடி எழுதுனதை மறுத்து இன்று பொய்யா நடிக்க முடியாது.  அதை எப்படி மாற்ற முடியும். தமிழ் சினிமாவின் ஆசிரியர் அவர், சினிமாவுக்குள் வருவேனா என்று தெரியாத காலத்தில் கூட நான் அதை எழுதினேன். இன்று நான் அவருடைய சக கலைஞனாக வந்திருக்கும் போது அதை பேசுவதற்கான உரிமை இருக்கு. ஒரு தகப்பன் ஸ்தானத்தில் கமல் சார் இருக்கார். அவர் மேடையில் வந்து கவலை படாதே.. இது உன் அரசியல் மட்டுமல்ல.. இது நம்ம அரசியல் னு சொல்றாரு. அவர் புரிஞ்சிக்குறாரு..” என்றார் மாரி செல்வராஜ். மேலும் தொடர்ந்து பேசுகையில்,

“சிலர் கேட்டார்கள், அதை ஏன் அங்கு பேசின.. என்று. நான் மாமன்னன் னு ஒரு படம் எடுத்திருக்கேன்.  அதை கமல் சார்கிட்ட போட்டு காட்டி விட்டேன். அதை வேலை என்னவா இருந்தது என்று அவருக்கு தெரியும்.‌ மாமன்னன் படம் குறித்து அவரிடம் தான் பேச முடியும். அதை ஏன் மேடையில் பேசுனனு கேட்டா அது என் உணர்வு..

நான் அந்த தருணத்தை நான் அனுபவித்தேன்.. இத்தனை வருஷத்தில் அந்த தருணம் என்னை இலகுவாக்கியது. மாமன்னன் படத்தில் தேவர் மகன் பாதிப்பு இருக்கானு கேட்டா இருக்கு.. அப்பா பையன் கதைக்களம் கொண்டு வரும் படங்கள் தேவர்மகன் சாயல் இல்லாமல் வருவதில்லை.‌.

அதிலிருப்பதை நான் கையாளவேண்டும் என்றால் அதற்கு நான் அவரிடம் பேசியாக வேண்டும். என் வாழ்க்கையோட மிக முக்கியமான தருணம்.  என் கைய பிடிச்ச கமல் சாரை பத்தி தான் அந்த உணர்வு தெரியும்.” என்றார் இயக்குனர் மாரி செல்வராஜ்

மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட மாமன்னன் பட சிறப்பு நேர்காணலை காண..

 

“மாரி செல்வராஜ் மேடையில பேசுனது இதுதான்..
சினிமா

“மாரி செல்வராஜ் மேடையில பேசுனது இதுதான்.." உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..! – Exclusive Interview உள்ளே..

சினிமா

"வேற லெவல் சார் நீங்க..!"- வைரலான ராவடி பாடல் மீம் வீடியோவை RECREATE செய்த ARரஹ்மான்... ட்ரண்டாகும் இன்ஸ்டாகிராம் REEL இதோ!

வரிசையாக கைவசம் அசத்தலான படங்கள் - புதிய வெப் சீரிஸ்... அடுத்தடுத்த திட்டங்களை பகிர்ந்த வாணி போஜனின் சிறப்பு பேட்டி!
சினிமா

வரிசையாக கைவசம் அசத்தலான படங்கள் - புதிய வெப் சீரிஸ்... அடுத்தடுத்த திட்டங்களை பகிர்ந்த வாணி போஜனின் சிறப்பு பேட்டி!