தளபதி விஜயின் லியோ பட 'நா ரெடி' பாட்டுக்கு நடனமாடிய விக்ரம் பட 'ஏஜென்ட் டீனா'... ட்ரெண்டிங் வீடியோ இதோ!

லியோ பட நா ரெடி பாட்டுக்கு நடனமாடிய விக்ரம் பட ஏஜென்ட் டீனா,Vikram movie agent tina naa ready dance video of thalapathy vijay in leo movie | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67 வது திரைப்படமாக தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "நா ரெடி" பாடலுக்கு விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகை வசந்தி நடனமாடும் வீடியோ வெளியானது. முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. 

தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து  மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

முன்னதாக தொடர்ந்து 50 நாட்கள் காஸ்மீரில் நடைபெற்ற லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜயின் பிறந்தநாள் தினமான ஜூன் 22ஆம் தேதி லியோ திரைப்படத்தின் முதல் பாடலான "நா ரெடி" பாடல் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அனிருத்தின் அட்டகாசமான இசையில் தினேஷ் மாஸ்டரின் துள்ளலான நடன இயக்கத்தில் தளபதி விஜய் ஸ்டைலாக நடனமாடி இருக்கும் நா ரெடி பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் தினேஷ் மாஸ்டர் அவர்களின் முன்னணி உதவி நடன இயக்குனரும், பிரபல நடிகையும் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரள வைத்த வசந்தி "நா ரெடி" பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது. விக்ரம் படத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் அதிரடி ஆக்ஷனில் இறங்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய வசந்தி அவர்கள் நா ரெடி பாடலுக்கு நடனமாடிய அந்த வீடியோ இதோ…
 

Vibe 😇❤💥 #NaaReady #Leo #ThalapathyVijay @actorvijay pic.twitter.com/BJbj2ToC5F

— Vasanthi Guru (@iamVasanthiGuru) June 25, 2023

ரிலீஸுக்கு ரெடியான மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்... சென்சார் குறித்த அதிரடியான அறிவிப்பு இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்... சென்சார் குறித்த அதிரடியான அறிவிப்பு இதோ!

சினிமா

"லியோ பட 'நா ரெடி' பாடலுக்கு தளபதி விஜயின் ரியாக்ஷன் என்ன?"- முதல் முறை மனம் திறந்த விஷ்ணு எடவன்! ட்ரெண்டிங் வீடியோ

'ஜாலியா இருக்கீங்க.. இந்த உலகத்துக்குள்ள வாங்க.!' என்ற மாரி செல்வராஜ்... உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட அனுபவங்கள் இதோ!
சினிமா

'ஜாலியா இருக்கீங்க.. இந்த உலகத்துக்குள்ள வாங்க.!' என்ற மாரி செல்வராஜ்... உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட அனுபவங்கள் இதோ!