தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.இவர் நடிப்பில் கடைசியாக இவரது 25ஆவது திரைப்படமான பூமி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன,மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்,கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஜெயம்ரவி.

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்தார் ஜெயம் ரவி.அகிலன் படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.இந்த படத்தினை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தையும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தினை SMS,பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற பல காமெடி படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கவுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் அறிவிப்பு போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்