“உக்ரைனில் உள்ள ஏராளமான பெண்களை, ரஷ்ய வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதாக” உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் கிளப்பி உள்ளது.

“போர், ஒரு குற்றம் தான். ஆமாம், முதலில் வெற்றியாகத் தெரியும், பின் அதுவே குற்றமாக தெரியும்!”

“போர் குற்றமா என்று கேட்டால், அது இனப்படுகொலையா மட்டுமில்லை, மனித படுகொலை மட்டுமல்ல, மனித உரிமை மீறல்கள்” என்பது தான் சரியான பதிலாக கூறப்படுகிறது.

போர் என்றால், எல்லா விதமான பாதிப்புகளும் இருப்பது இயல்புதான் என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அந்த “எல்லா விதமான இழப்பு” என்பது, பொள், செல்வங்கள், கட்டங்கள் மட்டுமல்ல, அந்த நாட்டு பெண்களும் தான்” என்பது தான் இதன் பேருண்மையாக இருக்கிறது.

அதாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி போர் தொடுக்கத் தொடங்கியது. அதன் படி, ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 10 நாட்காள நடைபெற்று வந்தன.

இந்த போரில், உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கும் நிலையில், ரஷ்யா சார்பில் பாதிக்கு பாதி அளவில் இழப்புகளும் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில், இந்த போர் தொடங்கிய முதல் நாள் அன்று, உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலமாக ரஷ்யா, குண்டு மழை பொழுந்தது. 

இதனால், உக்ரைன் நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள், அணு மின்நிலையம் ஆகியவை எல்லாம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இதனால், உயிருக்கு பயந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அந்நாட்டு மக்கள், அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கு கால்நடையாகவே நடந்து சென்று அங்கு தஞ்சமடைந்து வந்தனர்.

இந்த நிலையில் தான், சற்று முன்னதாக யாரும் எதிர்பார்க்காத வகையில், “மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக” ரஷியா அறிவித்து உள்ளது. 

அதுவும், “மனிதாபிமான அடிப்படையில் தான், இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாகவும்” ரஷிய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி, இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியில் இருந்து உக்ரைனில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்து உள்ளது.

ஆனால், இந்த போர் நிறுத்தம் அறிவிக்கு முன்னரே, “உக்ரைனில் உள்ள ஏராளமான பெண்களை, ரஷ்ய வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதாக” உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் கிளப்பி உள்ளது.

இது தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்த உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, “உக்ரைன் நகரங்களில் விளாடிமிர் புடினின் போர் படைகள், நாட்டில் பல இடங்களில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளதாக” பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “இந்த பாலியல் குற்றம்சாட்டு தொடர்பாக நாடு முழுவதும் பல இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த பாலியல் குற்றத்துக்காக விளாடிமிர் புடின் போர்க்குற்ற நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

முக்கியமாக, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா மிக கடுமையான போர் புரிந்து வருவதை வரும் சூழலில், ரஷ்யா மீது உக்ரைன் தொடர்ச்சியாக பல போர்க் குற்றங்களையும் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.