தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் சீன் ரோல்டன்.தன்னுடைய வித்தியாசமான பாடல்களால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொண்டுள்ளார்.இவர் இசையமைத்து சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து பறை என்ற ஆல்பம் பாடலிற்கு இசையமைத்துள்ளார்.இந்த பாடல் மார்ச் 4ஆம் தேதி வெளியானது.இந்த ஆல்பம் பாடலை திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளனர்.ஜடா படத்தின் இயக்குனர் குமரன் இந்த பாடலை இயக்கியுள்ளார்.சீன் ரோல்டன் இந்த பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.

பறை அடிக்கும் கலைஞர்களின் வாழ்வியல் மற்றும் அவர்கள் படும் கஷ்டங்கள் போன்றவற்றை இந்த பாடல் எடுத்துரைக்கிறது.அதோடு தீண்டாமை,ஜாதி வேறுபாடு போன்ற முக்கிய கருத்துக்களையும் இந்த பாடல் எடுத்துரைக்கிறது.ஒரு பறை கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

பூ ராம்,தனலட்சுமி,ஸ்ரீநாத் உள்ளிட்டோர் இந்த பாடலில் நடித்துள்ளனர்.அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என்ற கருத்தை மேல்நோக்கி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.ரசிகர்களிடம் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்