அந்தகன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | March 04, 2022 22:30 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் பிரஷாந்த் கடைசியாக தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடித்த வினய விதேய ராமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய பெற தவறின.
இதனையடுத்து மீண்டும் தமிழ் திரை உலகில் தனது அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் வகையில் பிரஷாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகிவருகிறது அந்தகன் திரைப்படம். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தியாகராஜன் அந்தகன் திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
பிரசாந்த் உடன் இணைந்து சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, ப்ரியாஆனந்த், யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள அந்தகன் படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் தற்போது அந்தகன் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள அந்தகன் திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தனது V கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிட உள்ளார்.
இந்நிலையில் அந்தகன் திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக பாடகர் சிட் ஸ்ரீராம் பாடியுள்ள என் காதல் பாடல் வருகிற மார்ச் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#EnKadhal from #Andhagan to rule your playlists from March 7th! 🎶
— Sony Music South (@SonyMusicSouth) March 4, 2022
A @Music_Santhosh musical sung by @sidsriram ! ❤️@actorprashanth @actorthiagaraja @SimranbaggaOffc @thondankani@PriyaAnand @theVcreations pic.twitter.com/q4ZpCGRBbq