கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள்” என்று, மதுரை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், “தண்டனை விவரம் வரும் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்” என்றும், நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர், பொறியியல் கல்லூரி படித்து வந்தார். 

கல்லுரி மாணவரான கோகுல்ராஜ், கடந்த 2015 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். 

அதுவும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவரான கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மற்றொரு சாதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை அவர் காதலித்து வந்தார் என்றும், கூறப்பட்டது.

அதாவது, அங்குள்ள சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட மொத்தம் 17 பேர், இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அத்துடன், “ கோகுல்ராஜ் கொலை வழக்கு, ஒரு திட்டமிட்டப்பட்ட ஆணவக்கொலை” என்பதனையும் போலீசார் உறுதி செய்தனர்.

மேலும், கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 17 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, கோகுல்ராஜை கொலை செய்து, அவரது உடலை அங்குள்ள ஒரு ரயில் தண்டவாளத்தில் போட்டு விட்டதாக தொடரடப்பட்ட வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பேர் கடந்த காலங்களில் உயிர் இழந்தனர்.

இதனையடுத்து, ஏனைய 15 பேர் மீதான இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையானது, நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு, இந்த வழக்கு அதிரடியாக மாற்றப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நடந்து முடிந்த நிலையில், நீதிமன்றம் இன்று இன்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. 

அதன் படி, தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம்,  “இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள்” என்று, அதிரடியாக அறிவித்தது.

குறிப்பாக, “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான முழுமையான தண்டனை விவரம், வரும் 8 ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும்” என்றும், மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்து உள்ளது. 

அத்துடன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். அதன் படி “சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை ஆகியோர் விடுதலை” செய்யப்பட்டனர்.

மேலும், “இந்த வழக்கில் நேரடி சாட்சி சுவாதி, பிறழ் சாட்சியாக மாறினாலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாக” உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு வழக்கறிஞர் மோகன், தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

முக்கியமாக, “சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அறிவியல் ரீதியாக குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்கு இது” என்றும், அவர் தெரிவித்தார்.

“கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது சதி, ஆள்கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டது” என்றும், அரசு வழக்கறிஞர் மோகன் கூறினார்.

அதே போல், “கொடூர கொலை செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், எந்த தாய்க்கும் என் போன்ற ஒரு நிலை வரக்கூடாது” என்றும், கோகுல்ராஜினின் தாய்யார் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து உள்ளார்.