‘மாமன்னன்’ படத்தில் ஏன் சந்தோஷ் நாராயணன் இல்லை..? உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின்.. – Exclusive Interview உள்ளே..

மாமன்னன் படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இடம் பெற்ற காரணம் வீடியோ உள்ளே -  Udhayanidhi stalin about ar Rahman for maamannan | Galatta

தமிழ் சினிமாவில் சம காலத்தில் ரசிகர்கள் மனதை உடனடியாக கவரும் இயக்குனர் இசையமைப்பாளர் கூட்டணியாக மாரி செல்வராஜ் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி இருந்து வருகிறது. ஆரம்ப காலக் கட்டத்தில் இயக்குனர் பா ரஞ்சித் – சந்தோஷ் நாராயணனின் நட்பு அவரது தயாரிப்பில் படம் இயக்கிய மாரி செல்வராஜ் உடனும் ஏற்பட்டு அதன்படி இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி வெளியான ‘பரியேரும் பெருமாள்’ படத்தில் சந்தோஷ் நாராயணன் கூட்டணி அமைந்தது.

மாரி செல்வராஜின் முதல் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை வெகுவாக பேசப்பட்டது. எளிய மக்களின் இசையை லாவகமாக பயன்படுத்தி ஹிட் அடிப்பதில் சந்தோஷ் நாராயணன் வல்லவர் அதன்படி பரியேரும் பெருமாள் படத்தில் காட்சிக்கு காட்சி அழகியலையும் அந்த காட்சியின் உணர்வையும் சந்தோஷ் நாராயணன் இசை சுவாரஸ்யம் சேர்த்தது. இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் கவனம் பெற்றது.

அதை தொடர்ந்து மாரி செல்வராஜின் இரண்டாவது படமான கர்ணன் தனுஷ் நடிப்பில்  வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்திலும் சந்தோஷ் நாராயணன் அட்டகாசமான பாடல்களையும் அழுத்தமான பின்னணி இசையையும் கொடுத்து கவனம் ஈர்த்தார். தொடர்ந்து இரண்டு படங்களில் இந்த கூட்டணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் மூன்றாவது திரைப்படமான மாமன்னன் படத்தில் சந்தோஷ் நாராயணன் பதிலாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக தகவல் வெளியானது. இந்த அறிவிப்பு சந்தோஷ் நாராயணன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான மாமன்னன் பட பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. இருந்தாலும் சந்தோஷ் நாராயணன் மாரி செல்வராஜ் கூட்டணி ரசிகர்களிடையே தனி விருப்ப பட்டியாலாக இருந்து வந்தது. இப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இடம் பெற்றதற்கான காரணம் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் மாமன்னன் பட தயாரிப்பாளரும் கதாநாயகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டனர்.

அவர் பேசியதாவது, “ரஹ்மான் சார் உள்ள வராரு.. மாரி செல்வராஜ் சந்தோஷ் நாராயணன் தான் வேண்டும் னு கேட்டார். நான் இல்ல.. இது என் கடைசி படம். நான் சந்தோஷ் கூட வேலை செஞ்சிருக்கேன். ரஹ்மான் சாரோட ஒரு படம் வேலை செய்யனும் னு ஆசை.‌. னு சொன்னேன்.அப்போ கொரோனா லாக்டவுன் ரஹ்மான் சார் துபாய் ல இருந்தார். அப்போ ஜூம் மீட்டிங் ல நான் மாரி செல்வராஜ், ரஹ்மான் சார் முதல் முறையா பேசிக்கிட்டோம்.

எல்லோருக்கிட்டையும் கடைசி படம் னு சொல்லி சொல்லி தான் இந்த படத்துக்குள்ள கொண்டு வந்தேன். அதே போல தான் கீர்த்தி சுரேஷ்.  நான் இதுவரைக்கும் பெரிய ஹீரோயின் கூட படம் நடிச்சது இல்ல.. நான் ஒரு வளர்ந்து வரும் நடிகைகளை வெச்சுதான் படம் பண்ணிருக்கேன்.  ஏன்னா நான் ரொம்ப நாள் வேலை வாங்குவேன் டேட் தேவைப்படும் என்றார் மாரி செல்வராஜ்.

எனக்கும் கீர்த்திக்கும் நல்ல நட்பு இருக்கு.. ரொம்ப நாளா ஒரு படம் பண்ணனும் னு நினைச்சோம். இந்த படம் குறித்து கீர்த்தியிடம் கேட்டேன். இது என் கடைசி படம் னு சொல்லி கேட்டேன். மாரி செல்வராஜ் படமா னு கேட்டு அவங்களும் உள்ள வராங்க.. படப்பிடிப்பின் போது இவ்ளோ பெரிய நடிகர்கள் இருக்கும்போது நான் எப்படி இந்த கதைக்குள்ள‌ வர போறேன்னு நினைச்சேன். ஆனா மாரி செல்வராஜ் கதையில எல்லா கதாபாத்திரத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார் ன்ற நம்பிக்கைதான்.” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் வெளியாகவிருக்கும் மாமன்னன் படம் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே..

 

ஒரே நாளில் குடும்பத்தில் அடுத்தடுத்த இழப்பு.. உடைந்த பிரபல நடிகர் போஸ் வெங்கட்..!
சினிமா

ஒரே நாளில் குடும்பத்தில் அடுத்தடுத்த இழப்பு.. உடைந்த பிரபல நடிகர் போஸ் வெங்கட்..!

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சினிமா

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

'மாமன்னன்' படத்தில் வடிவேலு இணைந்தது இப்படிதான்..! உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்.. - Exclusive interview உள்ளே..
சினிமா

'மாமன்னன்' படத்தில் வடிவேலு இணைந்தது இப்படிதான்..! உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்.. - Exclusive interview உள்ளே..