வைகைப்புயல் உடன் இணைந்து பாடிய இசைப்புயல்... மாமன்னன் ராசா கண்ணு பாடலின் புது வெர்ஷன்! வைரல் வீடியோ உள்ளே

வடிவேலு ஏ ஆர் ரகுமான் இணைந்து பாடிய மாமன்னன் ராசா கண்ணு,vadivelu ar rahman raasa kannu live performance in maamannan audio launch | Galatta

மாமன்னன் திரைப்படத்தில் இடம் பெற்ற ராசா கண்ணு பாடலை வைகைப்புயல் வடிவேலு அவர்களோடு இணைந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் பாடிய புதிய வீடியோ தற்போது வெளியானது. தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த மாமன்னன் திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின், முன்னதாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிப்பதால், முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாலும், அவரது நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம் மாமன்னன் தான்.

பரியேறும் பெருமாள் & கர்ணன் என தனது படங்களால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் & வைகைப்புயல் வடிவேலு உடன் இணைந்து ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

வைகைப்புயல் வடிவேலு அவர்களை இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட புதிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இந்த கதாப்பாத்திரம் குறித்து  மாமன்னன் பட இசை வெளியீட்டில் பேசியபோது, "இது கொஞ்சம் வில்லன் மாதிரியும் இருக்கும்" என வடிவேலு அவர்கள் தெரிவித்திருப்பது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் அனைவருக்கும் கவனத்தையும் வெகுவாக இருந்ததோடு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

ஒருபுறம் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் மிக இயல்பாக நடிக்க, மறுபுறம் வழக்கமான வைகைப்புயலிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பார்வையிலேயே எரிமலையாய் ரசிகர்களை திகைக்க வைக்கிறார் வடிவேலு. புரட்சிகரமான பெண்ணாக கீர்த்தி சுரேஷ் கவனத்தை ஈர்க்கும் அதே சமயத்தில் மிரட்டலான வில்லனாக கர்ஜிக்கிறார் ஃபகத் பாசில். முன்னதாக மாமன்னன் படத்தின் முதல் பாடலாக இசை புயல் - வைகைப்புயல் கூட்டணியில் வெளிவந்த ராசா கண்ணு பாடல் அனைவரது மனதையும் உருக்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வைகைப்புயல் வடிவேலு ராசா கண்ணு பாடலை மக்கள் மத்தியில் பாடினார். அப்போது அவரோடு இணைந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் அந்த பாடலைப் பாட அரங்கமே கரகோஷத்தாலும் ரசிகர்களின் ஆரவாரத்தாலும் அதிர்ந்தது. இந்த நிலையில் வைகைப்புயல் - இசைப்புயல் இணைந்து பாடிய ராசா கண்ணு பாடலின் அந்த ஸ்பெஷல் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.  ராசா கண்ணு பாடலின் புது வெர்ஷனாக தற்போது வெளிவந்திருக்கும் அந்த புது வீடியோ இதோ…
 

வரிசையாக கைவசம் அசத்தலான படங்கள் - புதிய வெப் சீரிஸ்... அடுத்தடுத்த திட்டங்களை பகிர்ந்த வாணி போஜனின் சிறப்பு பேட்டி!
சினிமா

வரிசையாக கைவசம் அசத்தலான படங்கள் - புதிய வெப் சீரிஸ்... அடுத்தடுத்த திட்டங்களை பகிர்ந்த வாணி போஜனின் சிறப்பு பேட்டி!

விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு பட சர்ப்ரைஸ்... கவனிக்க வைத்த விறுவிறுப்பான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு பட சர்ப்ரைஸ்... கவனிக்க வைத்த விறுவிறுப்பான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

80 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர்.. அதிரடி நடவடிக்கை எடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா..!
சினிமா

80 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர்.. அதிரடி நடவடிக்கை எடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா..!