ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' டிரைலர்..! - பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை உறுதி செய்யும் 6 காரணங்கள் இதோ..

மாவீரன் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை உறுதி செய்யும் 6 காரணங்கள் - 6 Reasons that why sivakaathikeyan maaveeran will be blockbuster | Galatta

தமிழ் சினிமாவில் ரசிகர்களை படத்திற்கு படம் உற்சாகப்படுத்தி கவனத்தை ஈர்த்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை கச்சிதமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டாராக அவரை உயர்த்தியது. இவரது முன்னதைய திரைப்படமான டான் திரைப்படம் பெரிதளவு வரவேற்பு பெறாமல் கலவையான விமர்சனம் பெற்று தோல்வி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் வரும் ஜூலை 14 வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மாவீரன்’. இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த திரைலரின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு மற்றுமொரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக மாவீரனை மாற்றும் 5 விஷயங்கள் குறித்த சிறப்பு கட்டுரை இதோ.

சிவகார்த்திகேயன்  

தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு வயதினரையும் தன் நடிப்பினால் உற்சாகப் படுத்தி வரும் சிவார்த்திகேயன் இன்று கோலிவுட்டின் பக்கா என்டர்டேயின் ஸ்டாராக வலம் வருகிறார். அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்தும் வகையில் நேர்த்தியான கமர்ஷியல் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அதன்படி மாவீரன் படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் இரு பரிமாணங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அப்பாவியான கலகலப்பான சிவகார்த்திகேயன்  ஒருபுறம் பெண்டசியில் வானத்தை நோக்கி பார்த்த பின் ஆக்ஷனில் மிரட்டும் சிவகார்த்திகேயன் ஒரு புறம் என்று மாவீரன் முன்னோட்டத்திலே ஜொலிக்கிறார். நிச்சயம் டாக்டர் படத்தில் வரும் சிவகார்த்திகேயன் போல் இந்த படத்திலும் வித்யாசமான சிவகார்த்திகேயனை எதிர்பார்க்கலாம்.

director pa ranjith about mari selvaraj udhayanidhi stalin maamannan

வித்யாசமான கதைக்களம்

ஒருபுறம் அப்பாவியும் எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்கும் சிவகார்த்திகேயன் திடீரென மிரட்டலான கமர்ஷியல் ஹீரோவாக மாறுகிறார். பேண்டசி கதைக்களத்துடன் அந்நியன் பட பாணியில் கதைக்களம் அமைந்துள்ளது. நிச்சயம் குழந்தைகளுக்கு சிறப்பு டிரீட்டாக அமையும் மற்றும் கதையின் கருவை பாதிக்காமல் படம் நகரும் என்பதை முன்னோட்டம் மூலமாக பார்க்க முடிகிறது.

director pa ranjith about mari selvaraj udhayanidhi stalin maamannan

மடோன் அஷ்வின்

மண்டேலா படத்தின் மூலம் அழுத்தமான கதைக்களத்தை காமெடி காட்சிகளுடனும் நய்யாண்டிதனத்துடன் பேசிய இயக்குனர் மடோன் அஷ்வின் இப்படத்திலும் கமர்ஷியல் மாஸ் காட்சிகளுடன் சமூக கருத்தினை பேச முன் வந்துள்ளார். குடிசை மாற்று வாரியம் தொடர்பாக அரசியல் தவறுகளை சுட்டிக்காட்டும் படமாக அமையும் என்பதை மாவீரன் உணர்த்துகிறது.  நிச்சயம் சிவ்கார்த்திகேயன் ஸ்டைலில் மடோன் அஷ்வின் அழுத்தமான கதையை மாவீரன் மூலம் பேசுவார்.

director pa ranjith about mari selvaraj udhayanidhi stalin maamannan

தொழில்நுட்ப கலைஞர்கள்

மாவீரன் டிரைலரில் காட்சிக்கு காட்சி புத்துணர்வான காட்சிகள். இசை முதல் ஒளிப்பதிவு என்று ஒவ்வொரு துறையிலும்  ரசிகர்களை வியக்க வைத்து உள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகள் டிரைலரிலே மிரட்டலாக இருக்கும் போது நிச்சயம் திரையரங்குகளில் ரசிகர்களை கொண்டாட வைக்கும். மேலும் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று டிரண்டிங்கில் இருப்பது குறிப்பிடதக்கது.  

director pa ranjith about mari selvaraj udhayanidhi stalin maamannan

நடிகர்கள்

நீண்ட நாள் கழித்து தமிழில் ரீ என்ட்ரி கொக்க்கும் நடிகை சரிதா. ஏற்கனவே சில முக்கியமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மிஷ்கின். புஷ்பா படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த சுனிலின் முதல் தமிழ் ரிலீஸ். விருமன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அதிதி ஷங்கர். ரெமோ, மிஸ்டர் லோக்கல், டாக்டர் படங்களை தொடந்து மீண்டும் அட்டகாசமான காமெடி கவுண்டர்களுடன் சிவகார்திகேயன் – யோகி பாபு காம்போ என்று படத்தில் மேலும் மேலும் சுவாரஸ்யத்தை கொண்டுள்ளது மாவீரன் திரைப்படம் .  

director pa ranjith about mari selvaraj udhayanidhi stalin maamannan

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடு

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல நல்ல நல்ல திரைப்படங்களை வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சிவகர்த்திகேயனின் 100கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த டான் படத்திற்கு பின் கூட்டணி அமைக்கும் திரைப்படம் மாவீரன். நிச்சயம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

director pa ranjith about mari selvaraj udhayanidhi stalin maamannan

 

முனைவர் பட்டம் பெற்று கௌரவப்படுத்திய தாயார் மேகலா சித்ரவேல்.. பெருமையுடன் பார்த்து ரசித்த வெற்றிமாறன்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

முனைவர் பட்டம் பெற்று கௌரவப்படுத்திய தாயார் மேகலா சித்ரவேல்.. பெருமையுடன் பார்த்து ரசித்த வெற்றிமாறன்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..

“உயிரோட்டமான இசை..” மாமன்னன் வெற்றியை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் கொண்டாடிய படக்குழுவினர்..
சினிமா

“உயிரோட்டமான இசை..” மாமன்னன் வெற்றியை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் கொண்டாடிய படக்குழுவினர்..

வாரிசு, துணிவு முதல் மாமன்னன் வரை.. ஆண்டின் முதல் பாதியில் ரசிகர்கள் கொண்டாடிய முக்கியமான திரைப்படங்கள்.. – முழு பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

வாரிசு, துணிவு முதல் மாமன்னன் வரை.. ஆண்டின் முதல் பாதியில் ரசிகர்கள் கொண்டாடிய முக்கியமான திரைப்படங்கள்.. – முழு பட்டியல் இதோ..