முனைவர் பட்டம் பெற்று கௌரவப்படுத்திய தாயார் மேகலா சித்ரவேல்.. பெருமையுடன் பார்த்து ரசித்த வெற்றிமாறன்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..

முனைவர் பட்டம் பெற்ற வெற்றிமாறனின் தாயார் வைரல் வீடியோ உள்ளே - Vetrimaaran mother megala chitravel getting doctorate | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றி மாறன். முதல் படம் தொடங்கி இன்று வரை ரசிகர்களின் எதிரபார்பை எந்தவகையில் ஏமாற்றாத திரைப்படங்களை கொடுத்து இன்று வரை தமிழ் சினிமாவில் தனித்துவமான வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஒருபுறம் உலக மேடைகளில் விருதுகள் ஒருபுறம் என்று ஒருசேர தற்போது வரை இயக்குனர் வெற்றிமாறன் பயணித்து வருகிறார். அதன்படி ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் வெற்றி மாறன் திரைபயணத்தில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலே முக்கியமான திரைப்படங்களாக இருந்து வருகிறது.  தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற விசாரணை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அதை தொடர்ந்து நடிகர் சூர்யா வுடன் கூட்டணி அமைத்து கலைபுலி தாணு தயாரிப்பில் ‘வாடி வாசல்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். மற்றும் தனுஷ் கூட்டணியில் வடசென்னை 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். இயக்குனராகவும் எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் பயணித்து வரும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேல் தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அவருக்கு பட்டம் வழங்கினார். முதல் வரிசையில் இயக்குனர் வெற்றிமாறன் உட்கார்ந்து தன் தாயார் பட்டம் பெறுவதை மகிழ்ச்சியுடன் பார்த்து உள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேல், எழுத்தாளாராக இருந்து வருகிறார். ‘கமலி அண்ணி’. ‘ரதி தேவி வந்தாள்’. ‘வசந்தமே வருக’. ‘மழை மேக மயில்கள்’ உள்ளிட்ட பல நாவல்களை இதற்கு முன்னதாக இவர் எழுதியுள்ளார். எழுத்து மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய பழம்பெரும் நடிகர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.   இந்த நிகழ்வினை இயக்குனர் வெற்றிமாறன் உற்சாகத்துடன் கண்டு களித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மேகலா சித்ரவேல், என்னைப் படிக்க வைத்ததே வெற்றிமாறன்தான். எனக்கு சிறுவயதிலிருந்தே என்னைப் படிக்க வைத்ததே வெற்றிமாறன்தான். எனக்கு சிறுவயதிலிருந்தே நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். பெண்கள் நிறைய முன்னேற வேண்டும். வயதெல்லாம் ஒரு காரணமாக காட்ட வேண்டியதில்லை. வயதைக் காரணம் காட்டி அவர்களை அடக்கக் கூடாது. எந்த வயதிலும் எது வேணாலும் செய்யலாம்.

நான் எம்ஜிஆர் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். அதையெல்லாம் படித்து பிடித்து போன வாசகர் தான் எனது கைடு பேராசிரியர் பிரபாகர். அவர் என்னிடம் எம் ஜி ஆர் குறித்து எழுதியதை தொகுத்து ஆய்வு கட்டுரையாக கொடுங்கள். முனைவர் பட்டம் கிடைக்கும் என்றார். இது குறித்து என் மகன் வெற்றிமாறனிடம் கேட்கையில் ‘கண்டிப்பாக நீங்க இத பண்ணுங்கம்மா’ என்றான். அவன்தான் 4 வருட கட்டணத்தை கட்டி என்னை படிக்க வைத்தான்.” என்றார் பின் தொடர்ந்து பேசிய அவர்,  “விழாவில் என் குடும்பத்தினர் எல்லோரும் வந்தார்கள். இது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. இதனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், பெண்கள் எந்த வயதிலும் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். அடுத்த ஒரு பிஹெச்டி பண்ணலாம் என இருக்கிறேன் அதுக்கும் வெற்றிமாறன் ஓகே சொல்லிவிட்டான். என்னை எப்போது சுயம் தொலைக்காத பெண்ணாக தான் வெற்றிமாறன் பார்த்து வருகிறார். நாங்கள் அதிகம் பேசமாட்டோம். எங்கள் வீட்டுக்குள் சினிமா வரவே வராது.” என்றார் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேல்.  

 

 

“ராஜன் வகையறா படம் உருவாகுமா?” வடசென்னை படம் குறித்து இயக்குனர் அமீர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“ராஜன் வகையறா படம் உருவாகுமா?” வடசென்னை படம் குறித்து இயக்குனர் அமீர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – வைரல் வீடியோ உள்ளே..

“மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறார்.?”– இயக்குனர் அமீரின் அட்டகாசமான பதில்..
சினிமா

“மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறார்.?”– இயக்குனர் அமீரின் அட்டகாசமான பதில்..

‘மாடர்ன் லவ் சென்னை’ வெற்றியை தொடர்ந்து தமிழில் புதுவரவு.. - ரசிகர்களை கவர்ந்து வைரலாகும் ‘ஸ்வீட் காரம் காபி’ தொடரின் டிரைலர் இதோ.
சினிமா

‘மாடர்ன் லவ் சென்னை’ வெற்றியை தொடர்ந்து தமிழில் புதுவரவு.. - ரசிகர்களை கவர்ந்து வைரலாகும் ‘ஸ்வீட் காரம் காபி’ தொடரின் டிரைலர் இதோ.