நெல்சன், அனிருத் ஆட்டம் ஆரம்பம்.. 1st Single அப்டேட்டை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாணியில் வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு – வைரல் பதிவு உள்ளே..

ஜெயிலர் முதல் பாடல் குறித்த அப்டேட்டை பகிர்ந்த அனிருத் வைரல் பதிவு உள்ளே - Anirudh about super star rajinikanth jailer song update | Galatta

இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக அன்றும் இன்றும் என்றும் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பல தாசப்தங்களாக அவருக்கே உரித்தான ஸ்டைலில் பல படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறார். 70 வயதை கடந்தும் இன்றும் பல அட்டகாசமான படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதன்படி தற்போது அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். தற்போது திருவண்ணாமலை பகுதியில் நடந்து வரும் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து ஜெய் பீம் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ‘தலைவர் 170’ என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளார்.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பக்கா ஆக்ஷன் என்டர்டெயினிங் திரைப்படமாக உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மேலும் இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய நிர்மல் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

ரசிகர்களின்  எதிர்பார்ப்பில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி உலகமெங்கும் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக இணையத்தில் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்ப அதற்கு படக்குழு, டாக்டர் படத்தின் புரோமோவில் நெல்சன் அனிருத் திடம் முதல் பாடல் எப்போது என்று கேட்கும் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

.@anirudhofficial andha first single…?? ⏳⏰#JailerUpdate @Nelsondilpkumar pic.twitter.com/9Ytc636nDj

— Sun Pictures (@sunpictures) July 1, 2023

இந்த பதிவு வைரலாக இயக்குனர் நெல்சன் அந்த பதிவை பகிர்ந்து ஸ்டுடியோவில் அனிருத் பணியாற்றும் புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன், “இப்போதைக்கு போட்டோ தான் வந்திருக்கு..” என்று கலாய்த்து பகிர்ந்துள்ளார்.

 

Ipothaiku photo thaan vanthuruku 😄@sunpictures @anirudhofficial https://t.co/0ArGSaJrJW pic.twitter.com/ZdLl5Hg1or

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) July 1, 2023

director vetrimaaran mother megala chitravel getting doctorate watch video here

இதையடுத்து அனிருத் அண்ணாமலை படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி புகைப்படத்தை பகிர்ந்து சூப்பர் ஸ்டார் பாணியில் “இன்னும் நான்கு நாட்களில்..” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதையடுத்து இணையத்தில் அனிருத் பதிவு வைரலாகி வருகிறது. தற்போது ஜெயிலர் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

View this post on Instagram

A post shared by Anirudh (@anirudhofficial)

வாரிசு, துணிவு முதல் மாமன்னன் வரை.. ஆண்டின் முதல் பாதியில் ரசிகர்கள் கொண்டாடிய முக்கியமான திரைப்படங்கள்.. – முழு பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

வாரிசு, துணிவு முதல் மாமன்னன் வரை.. ஆண்டின் முதல் பாதியில் ரசிகர்கள் கொண்டாடிய முக்கியமான திரைப்படங்கள்.. – முழு பட்டியல் இதோ..

“ராஜன் வகையறா படம் உருவாகுமா?” வடசென்னை படம் குறித்து இயக்குனர் அமீர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“ராஜன் வகையறா படம் உருவாகுமா?” வடசென்னை படம் குறித்து இயக்குனர் அமீர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – வைரல் வீடியோ உள்ளே..

“மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறார்.?”– இயக்குனர் அமீரின் அட்டகாசமான பதில்..
சினிமா

“மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறார்.?”– இயக்குனர் அமீரின் அட்டகாசமான பதில்..