'மாற்றம் நடக்குதோ.. இல்லையோ..!'- தொடர்ந்து சமூக நீதி பேசும் படங்கள் இயக்குவது பற்றி பேசிய மாரி செல்வராஜ்! வீடியோ உள்ளே

தொடர்ந்து சமூக நீதி பேசும் படங்கள் இயக்குவது பற்றி பேசிய மாரி செல்வராஜ்,mari selvaraj about why he directing social justice movies | Galatta

பரியேறும் பெருமாள் , கர்ணன் வரிசையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கும் மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மினி கூப்பர் கார் ஒன்று அன்பு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடிகையும் இயக்குனருமான சுகாசினி மணிரத்தினம் அவர்களோடு நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.  

அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம், “நீங்கள் பார்த்த வேற்றுமைகள், உங்களுடைய கோபங்கள் இதெல்லாம் அடுத்தடுத்த திரைப்படங்களில் வந்து கொண்டே இருக்கிறது. இது இன்னும் எவ்வளவு நாள் தொடர போகிறது. அல்லது ஒரு சமயத்தில் இதை விட்டுவிட்டு வேறு மாதிரியான கதைகள் நீங்கள் பண்ண வாய்ப்பு இருக்கிறதா? அந்தக் கதைக்களம் நன்றாக இருக்கலாம்.. இந்த மூன்று படங்களிலும் உங்களுக்கு கிடைத்த பரிசு என்ன? எனக் கேட்டபோது,

“நிறைய மக்களை சந்தித்து இருக்கிறேன் நிறைய மக்களுடைய அன்பு கிடைத்திருக்கிறது. அது ரொம்ப முக்கியமான விஷயம். எந்தக் கதை யாரை சந்தித்தாலும் ஒரு வாழ்வியல் முரண் இருந்து கொண்டே இருப்பது தெரிகிறது எனக்கு.. நான் பிறந்த இடத்திற்கும் இவ்வளவு தூரம் நான் பயணித்து வந்த போதும் நிறைய விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். சினிமா… இப்போது பார்த்தீர்கள் என்றால் எல்லா விஷயத்திலுமே இந்திய அரசியலிலும் சரி தமிழக அரசியலிலும் சரி தினமும் அது பற்றி பேசாத விஷயமே இல்லை.. ஆனால் சினிமாவில் பேசும் போது மட்டும் நிறைய அதிர்ச்சி அடைகிறார்கள். ஏன் எப்போது பார்த்தாலும் அதையே பேசுகிறீர்கள். யூட்யூப்பிலும் அதுதான் இருக்கிறது எங்கு பார்த்தாலும் அது தான் இருக்கிறது. இது ஒரு பிரச்சனை மட்டும் கிடையாது, வாழ்வியலாவே அப்படித்தான் இருக்கிறது. வாழ்வியல் அப்படி பேசப்படும் போது ஒருவன் டீ சாப்பிட போகிறான் என்றால் அவன் தேர்ந்தெடுக்கும் ஒரு கடையிலிருந்து இருக்கிறது. ஒருவன் எங்கே சாப்பிடுகிறான் என்ன சாப்பிடுகிறான் யாரோடு போகிறான் எல்லா வாழ்வியல் சார்ந்தும் அந்த முகம் இருக்கிறது. இதை எல்லா தளத்திலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லா இலக்கியவாதிகளும் அதிகமாக பேசுகிறார்கள் எல்லா அரசியல்வாதிகளும் அதிகமாக பேசுகிறார்கள். அது சினிமாவில் பார்க்கும் போது அது நேரடியாக சினிமாவில் ஒரு கலை வடிவம் இருக்கிறது அல்லவா அதனுடைய மதிப்பு பெரிதாக இருக்கிறது. அதில் பேசும்போது அதாவது மேடையில் பேசுவதற்கும் கருத்தரங்குகளில் பேசுவதற்கும் கட்டுரைகளில் பேசுவதற்கும் கதைகளில் பேசுவதற்கும் தனித்தனியாக பிரித்து தேவையானதை எடுத்துக் கொள்வார்கள் தேவையற்றதை விட்டுவிடுவார்கள். அந்த விஷயத்தில் ஆனால் சினிமாவில் அப்படி இல்லை. சினிமாவில் தாக்கம் பயங்கரமாக இருக்கும். இரண்டரை மணி நேரம் செலவு செய்யக்கூடிய இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு அவ்வளவு சாதாரணமாக கடக்க முடியாது. இவ்வளவு கூட்டம் கூடி மக்கள் ஒன்றாக நேரத்தை செலவிடுவது சினிமாவில் மட்டும்தான். அப்போது அந்த நேரத்தை நாம் நம்முடைய மதிப்புகளாக மாற்ற வேண்டியது இருக்கிறது அல்லவா? அது மிகவும் தேவையானது. அப்போது இந்த வாழ்வியல் பாதிப்பை அதிகம் சந்தித்த ஒரு நபராக நான் பேசும் போது, நான் காதலிக்கும் போதும் வந்தது, எனக்கு நான் நண்பர்களோடு பழகும் போதும் வந்தது, இப்போது இதெல்லாம் வேறு வேறு ஜானர்கள் தானே நட்பைப் பற்றிய படம் எடுக்கும் போதும் அதில் அது வந்து விடுகிறதே.. ஒரு காதல் கதை எடுத்தாலும் அதன் இருக்கிறதே.. நான் ஒரு சமூகம் சார்ந்த ஒரு இடத்திற்கு வேலைக்கு போனால் அதைப் பற்றி கதை எடுத்தால் அங்கு அது இருக்கிறது. அது எந்த ஜானராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அதில் ஒரு இந்தியன் இருந்தால் ஒரு தமிழர் இருந்தால் அவருக்குள் அந்த ஒரு வேறுபாடு ஒரு வாழ்வியல் முரண் இருக்கத்தான் செய்யும் என்பது எல்லோருக்கும் அப்பட்டமாக தெரியும். அப்படி இருந்தும் அதை மறைத்து விட்டு வேறு ஒன்றை செய்வது இருக்கிறது அல்லவா அது இல்லை. நான் என்ன செய்கிறேன் என்றால் பாடுபொருளாகவே அதை வைக்கிறேன் அதன் சாராம்சத்திற்கு ஒரு மதிப்பு கொடுக்கிறேன். அதை சாதாரணமாக ஒரு கதாபாத்திரம் பேசிப் போகிறது ஒரு கதாபாத்திரம் சொல்லிவிட்டு போகிறது என்பது போல் இல்லாமல் என் கதையின் முக்கிய பாடுபொருளே அதுதான். வேறு வழி கிடையாது எனக்கு. இதன் மூலம் ஏதோ ஒரு சின்ன மாற்றம் நடக்குதோ இல்லையோ ஒரு விவாதம் தொடங்கி வைப்பது மிகவும் சந்தோஷம்…"  என பேசி இருக்கிறார். அந்த முழு பேட்டி இதோ…
 

'நெல்சனை கலாய்க்கும் அனிருத்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் அறிவிப்பு ப்ரோமாவுக்கு ப்ரோமோ! கலக்கல் வீடியோ இதோ
சினிமா

'நெல்சனை கலாய்க்கும் அனிருத்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் அறிவிப்பு ப்ரோமாவுக்கு ப்ரோமோ! கலக்கல் வீடியோ இதோ

ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய வேட்டையாடு விளையாடு... சிறந்த FANBOY இயக்குனர் யார்?- கௌதம் மேனன் & லோகேஷ் கனகராஜ் பதில்கள் இதோ!
சினிமா

ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய வேட்டையாடு விளையாடு... சிறந்த FANBOY இயக்குனர் யார்?- கௌதம் மேனன் & லோகேஷ் கனகராஜ் பதில்கள் இதோ!

பக்கா ஆக்சன் ட்ரீட் கிச்சா46...  வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு - கிச்சா சுதீப்பின் அதிரடி பட மிரட்டலான முதல் GLIMPSE இதோ!
சினிமா

பக்கா ஆக்சன் ட்ரீட் கிச்சா46...  வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு - கிச்சா சுதீப்பின் அதிரடி பட மிரட்டலான முதல் GLIMPSE இதோ!