“உயிரோட்டமான இசை..” மாமன்னன் வெற்றியை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் கொண்டாடிய படக்குழுவினர்..

மாமன்னன் பட வெற்றியை எளிமையாக கொண்டாடிய படக்குழுவினர் – mari selvaraj and  team celebrate success of maamannan | Galatta

ரசிகர்களின் கவனத்தை முதல் படத்திலே ஈர்த்து தற்போது குறிப்பிடப்படும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேரும் பெருமாள். கர்ணன் பட வெற்றியையடுத்து தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. சமூக அரசியலை வலுவாக பேசி வெளியாகியிருக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இவர் இசையில் வெளியான படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலானது. மேலும் படத்திற்கு பாடல் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தகது.

மாமன்னன் படத்தின் அறிவிப்பிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதன்படி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஆரவாரமான கொண்டாட்டத்துடனும் கடந்த மே 29 ம் தேதி உலகமெங்கும் மாமன்னன் திரையரங்குகளில் வெளியானது.மூன்றாவது நாளாக திரையரங்குகளில் வெற்றிகராமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் படத்திற்கு பெருவாரியான நேர்மறையான விமர்சனங்களும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். மேலும் இரண்டு நாட்களில் மாமன்னன் திரைப்படம் ரூ 10 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் வெற்றியை தற்போது படக்குழுவினர் எளிமையான முறையில் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் உடன் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், பின்னணி பாடகர் ஏ ஆர் அமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்வு குறித்து புகைப்படங்களை பகிர்ந்து அதனுடன், “மாமன்னன் திரைப்படத்தை தன் உயிரோட்டமான இசையாள வெற்றிபடைப்பாக்கிய இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சார் அவர்களுக்கு படக்குழுவின் சார்பில் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்”  என்று குறிப்பிட்டுள்ளார்.

#மாமன்னன் திரைப்படத்தை தன் உயிரோட்டமான இசையால் வெற்றிப்படைப்பாக்கிய இசைப்புயல் @arrahman சார் அவர்களுக்கு, படக்குழுவின் சார்பில் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். #MAAMANNAN@mari_selvaraj #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil pic.twitter.com/DIGU8ibt8F

— Udhay (@Udhaystalin) July 1, 2023

உதயநிதி ஸ்டாலின் அவர்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ். “மாமன்னன் பயணம் என்பது புன்னகை, அன்பு, உணர்வு என்று நிரம்பியவை, அருமையான மாலை பொழுதிற்கு  நன்றி ஏ ஆர் ரஹ்மான் சார்.!” என்று குறிப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

#Maamannan 🤴has been full of love, laughter and emotions! Thank you @arrahman siirr ❤️ for one beautiful evening!

Watch the film in theatres near you!! @Udhaystalin @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil pic.twitter.com/xTKmx207na

— Mari Selvaraj (@mari_selvaraj) July 1, 2023

“மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறார்.?”– இயக்குனர் அமீரின் அட்டகாசமான பதில்..
சினிமா

“மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறார்.?”– இயக்குனர் அமீரின் அட்டகாசமான பதில்..

‘மாடர்ன் லவ் சென்னை’ வெற்றியை தொடர்ந்து தமிழில் புதுவரவு.. - ரசிகர்களை கவர்ந்து வைரலாகும் ‘ஸ்வீட் காரம் காபி’ தொடரின் டிரைலர் இதோ.
சினிமா

‘மாடர்ன் லவ் சென்னை’ வெற்றியை தொடர்ந்து தமிழில் புதுவரவு.. - ரசிகர்களை கவர்ந்து வைரலாகும் ‘ஸ்வீட் காரம் காபி’ தொடரின் டிரைலர் இதோ.

“உண்மையை கேட்க ஏன் சங்கடபடுறோம்..”  ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகை கீதா கைலாசம்.. -  சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..
சினிமா

“உண்மையை கேட்க ஏன் சங்கடபடுறோம்..” ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகை கீதா கைலாசம்.. - சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..