சிவகார்த்திகேயனின் பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னர் கேரண்டி… ரசிகர் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மாவீரன் பட அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ட்ரெய்லர் வெளியீடு,Sivakarthikeyan in maaveeran movie trailer out now | Galatta

தனக்கென தனி பாணியில் தொடர்ந்து பக்கா என்டர்டைனிங் திரைப்படங்களாக கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் திரை பயணத்தில் மிக முக்கிய பணமாக அமைய இருக்கும் மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.  தனது பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக போட்டியாளராக தொகுப்பாளராக என படிப்படியாக வளர்ந்து பின்னர் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி தற்போது இன்றியமையாத நட்சத்திரம் நாயகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அனைத்து வயது ரசிகர்களாலும் ரசிக்கப்படும் வகையில் அமைந்திருப்பது வழக்கம். ஆயினும் அந்த வகையில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது. ஆனாலும் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கப்பட்ட நிலையில், இதர அறிவிப்புகள் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் என ரசிகர்கள் அவர்களோடு காத்திருக்கின்றனர்.முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் வழக்கமான ஜாலி ட்ராக்கில் இருந்து கொஞ்சம் விலகி அழுத்தமான படைப்பாக அடுத்து ரிலீசுக்கு தயாராகியுள்ள  திரைப்படம் தான் மாவீரன். யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. அட்டகாசமான அந்த மாவீரன் ட்ரெய்லர் இதோ…
 

பக்கா ஆக்சன் ட்ரீட் கிச்சா46...  வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு - கிச்சா சுதீப்பின் அதிரடி பட மிரட்டலான முதல் GLIMPSE இதோ!
சினிமா

பக்கா ஆக்சன் ட்ரீட் கிச்சா46...  வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு - கிச்சா சுதீப்பின் அதிரடி பட மிரட்டலான முதல் GLIMPSE இதோ!

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட வெற்றிக்கு மாரி செல்வராஜுக்கு ஸ்பெஷல் பரிசு... என்ன தெரியுமா?- ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட வெற்றிக்கு மாரி செல்வராஜுக்கு ஸ்பெஷல் பரிசு... என்ன தெரியுமா?- ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ

இறுதிக்கட்டத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் - அருண் விஜயின் அதிரடி ஆக்ஷன் படம்.. செம்ம அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

இறுதிக்கட்டத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் - அருண் விஜயின் அதிரடி ஆக்ஷன் படம்.. செம்ம அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!