தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த கலகத் தலைவன் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ளார். வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மட்டுமல்லாமல் தரமான திரைப்படங்களை தொடர்ந்து தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வெளியிட்டுவரும் உதயநிதி ஸ்டாலின், அடுத்ததாக கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கனதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படத்தை வெளியிடுகிறார்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள லவ்டுடே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள லவ்டுடே திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

We’re excited to be partnering with @Ags_production for the Tamilnadu theatrical distribution of #LoveToday 💕

See you in theatres on Nov 4th! #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @Udhaystalin @pradeep_ranganathan @archanakalpathi @thisisysr @MShenbagamoort3 pic.twitter.com/q0Qb26kOjA

— Red Giant Movies (@RedGiantMovies_) October 24, 2022