உலக அளவில் பல கோடி சினிமா ரசிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் மீது தனி ஆர்வம் உண்டு. அதிலும் மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களான அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், ஸ்பைடர் மேன், பிளாக் பேந்தர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், வுல்வொரின் சூப்பர் ஹீரோக்களுக்கென தனித் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன.

கடந்த ஆண்டிலிருந்து (2021) ப்ளாக் விடோ, ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் - இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ், தோர் - லவ் அண்ட் தண்டர் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து பிளாக் பேண்தர் - வக்காண்டா ஃபார்எவர், கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி - 3 ஆகிய படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் Ant-Man and The Wasp - Quantamania. இயக்குனர் பேடான் ரீட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் Ant-Man and The Wasp - Quantamania திரைப்படத்தில பால் ரட், எவான்ஜெலைன் லில்லி, மைக்கெல் டக்லஸ், மிச்செலி ஃபைஃபெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பில் போப் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிறிஸ்டோப் பெக் இசையமைத்துள்ளார்.

மர்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் வெளியிடும் Ant-Man and The Wasp - Quantamania திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Ant-Man and The Wasp - Quantamania படத்தின் அசத்தலான ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது அந்த ட்ரைலர் இதோ…