ஆரம்பகட்டத்தில் மலையாளத் திரையுலகில் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் கதாநாயகியாகவும் நடித்த நடிகை பூர்ணா தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து நகுல் உடன் இணைந்து கந்தக்கோட்டை படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த துரோகி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பூர்ணா, தொடர்ந்து அர்ஜுனன் காதலி,  வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னலோரம், தகராறு உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை பூர்ணா, ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சகலகலா வல்லவன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கங்கனா ரனாவத் நடிப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக வெளிவந்த தலைவி திரைப்படத்தில் VK.சசிகலாவின் கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விரைவில் வெளிவர இருக்கும் இயக்குனர் மிஷ்கினின் பிசாசு 2 படத்திலும் பூர்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே நடிகை பூர்ணாவுக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் சமீபத்தில் பூர்ணாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. ரசிகர்களும் திரையுலகினரும் பூர்ணாவின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், கலாட்டா குழுமமும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

 

View this post on Instagram

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)