தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மிப்பின் உச்சமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உலகெங்கும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் சாதனை படைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்த கார்த்தி ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்தார்.

இதனிடையே இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சர்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ள சர்தார் திரைப்படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, சர்தார் திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ரிலீசாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில், சர்தார் திரைப்படத்திலிருந்து புதிய Sneak Peek வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கவனம் ஈர்க்கும் அந்த வீடியோ இதோ...