லொள்ளு சபா மூலம் பிரபலமடைந்த சந்தானம் பின் வெள்ளித்திரையில் கால் வைத்து ரஜினி, அஜித், விஜய், சிம்பு என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில்  நடித்தார். கமேடியானாக நடிகர் சந்தானம் ஆரம்ப காலக்கட்டத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கிட்டத்தட்ட சந்தானம் இல்லாத படமே இல்லை என்ற நிலையை அவரது காமெடி மூலம் உருவாக்கினார்.

2008ல் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும் சந்தானம் அடித்த கவுண்டர்களுக்கும் நகைச்சுவை டிராக்குக்கும் தொடர் வெற்றியை பெற்று வந்தார். வடிவேல், விவேக் போன்ற உச்சபட்ச காமெடியன்களின்  திரை வெற்றிடத்தை சீக்கிரமே நிரப்பினார் சந்தானம் . இவருக்காக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இந்நிலையில் சந்தானம் கமெடியனாக நடிப்பதை நிறுத்தி முழு நீள காமெடி படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

தனக்கென்ற ஒரு குழுவை உருவாக்கி முழுநீள காமெடி படங்களில் நடித்து வந்தார் சந்தனம் அதன்படி  ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். ‘இனிமே இப்படிதான், ஏ1, டகால்டிபாரிஸ் ஜெயராஜ்,சபாபதி போன்ற படங்களில் நடித்து வந்தார். இதில் ‘தில்லுக்கு துட்டு’, ஏ1 போன்ற படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த ஆண்டு குலுகுலு,ஏஜன் கண்ணாயிரம் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல படங்களில் கதாநயகனாக நடித்து வரும் சந்தானம் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் ‘கிக்என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சந்தானம் கிக் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். மேலும் டப்பிங் பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை  அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இதுகுறித்த செய்தியை அறிவித்துள்ளார். அதில்,  KICK க்கான டப்பிங் முடிந்தது.. இந்தப் படம் உருவாகிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் மகிழ்விக்க விரைவில்! என்று குறிப்பிடிருந்தார்.  

Done with the dubbing for #KICK ✌️ super happy with the way this film has turned out. Coming soon to entertain you all in theatres!#கிக் #SantasKick @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj @johnsoncinepro@saregamasouthpic.twitter.com/6tK4E293ez

— Santhanam (@iamsanthanam) January 6, 2023

மேலும் இதனையடுத்து சந்தானத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் அனைவரும் அந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்