இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக இந்த வருடம் (2022) வெளிவந்த மாறன், திருச்சிற்றம்பலம், தி க்ரே மேன் (ஹாலிவுட்) மற்றும் நானே வருவேன் ஆகிய  படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். 

சமீபத்தில் தொடங்கிய கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த ஆண்டில் (2022) 4 திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள நிலையில் 5-வது திரைப்படமாக வெளிவரவுள்ள திரைப்படம் வாத்தி. முதல்முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் தனுஷ் நடித்துள்ள வாத்தி (SIR) திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். 

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள வாத்தி திரைப்படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருகிற 2023 பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகும் என சமீபத்தில் அறிவித்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் வாத்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் ரெக்கார்டிங் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் பாடல் ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். GV.பிரகாஷின் அந்த பதிவு இதோ…
 

#vaathi #sir second single recording on progress … @dhanushkraja @SitharaEnts #venkyatluri … second single soon 🔥💫✨

— G.V.Prakash Kumar (@gvprakash) November 25, 2022