கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த லவ் டுடே திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இளைஞர்கள் கூட்டம் ரிப்பீட் மோடில் தியேட்டர்களுக்கு படையெடுக்க பாக்ஸ் ஆபீஸில் 50கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் லவ் டுடே திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட லவ் டுடே திரைப்படத்தை தமிழில் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடிய நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு வெளியிட தெலுங்கில் லவ் டுடே திரைப்படம் இன்று (நவம்பர் 25) வெளியானது.

இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் ஆந்திராவில் தியேட்டரில் ரசிகர்களுடன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் படம் பார்த்தார். அப்போது படத்தை மிகவும் ரசித்த ரசிகர் ஒருவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை தூக்கி கொண்டாடி தனது விமர்சனத்தையும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். பிரதீப் ரங்கநாதனை ரசிகர் தூக்கிக் கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)