ரசிகர்களின் ரசனையை மெருகேற்றும் கலை ஞானியாக இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஃபகத் ஃபாசில் நடித்த மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். 

ஆனால் அதற்கு முன்பாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனது அடுத்த KH234 படத்தில் இயக்குனர் மணிரத்னத்துடன் கமல்ஹாசன் இணைவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன் தேசிய விருது பெற்ற இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.

கமல்ஹாசனுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாலிவுட் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான குல்சான் க்ரோவர் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் உடன் குல்சான் க்ரோவர் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

Excitement of filming with Great Kamal Haasan ⁦@ikamalhaasan⁩ for #Indian2 under Visionary Director ⁦@shankarshanmugh⁩ is ON ! ⁦@Rakulpreet@MsKajalAggarwal⁩ ⁦@priya_Bshankar⁩ ⁦@Udhaystalin@RedGiantMovies_⁩ ⁦@LycaProductions⁩ ⁦⁦ pic.twitter.com/s33rsMiZyI

— Gulshan Grover (@GulshanGroverGG) November 25, 2022