பல லட்சம் வாசகர்களின் மனம் கவர்ந்த அற்புத படைப்பான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பலரும் முயற்சி செய்து கைவிட்ட நிலையில், விடாமுயற்சியோடு கடின உழைப்போடு நிஜமாக்கினார் இயக்குனர் மணிரத்னம். பிரம்மாண்டத்தின் உச்சமாக பிரம்மிப்பான படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கின.

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, சுந்தர சோழர், மதுராந்தகர், சேந்தன் அமுதன், ரவி தாசன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், ரஹ்மான், அஸ்வின் காக்கமுன்னு, கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் பல நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாட பாக்ஸ் ஆபீஸிலும் 500கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்றான பூங்குழலி கதாபாத்திரத்தின் பாடலான அலைகடல் பாடலின் முழு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை ரசிகர்கள் பார்த்திராத, திரைப்படத்தில் இடம்பெறாத காட்சிகள் கொண்ட அலை கடல் பாடலின் அந்த முழு வீடியோ இதோ…