காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக இவர் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசானது.இதனை தொடர்ந்து சில anthology படங்களில் ஒரு பகுதியை இயக்கியிருந்தார் கெளதம் மேனன்

வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிலம்பரசன் TR நடிப்பில் தயாராகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவர் நடிகராகவும் சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்து கெளதம் மேனன் கலாட்டா பிளஸ் தலைமை ஆசிரியர் பரத்வாஜ் ரங்கனுடன் சிறப்பு நேர்காணலில் இணைந்தார்.இதில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் கெளதம் மேனன்.

சில மாதங்களுக்கு முன் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் விக்ரம்.கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தில் கெளதம் மேனன் நடிக வேண்டியதாக இருந்தது என்றும் படத்தின் ஷூட்டிங் இருந்ததால் நடிக்கமுடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள செம்பியன் வினோத் வரும் போலீஸ் வேடத்தில் நடிக்க முதலில் கெளதம் மேனனிடம் தான் லோகேஷ் பேசியிருந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.கெளதம் மேனன் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.