இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதனை அடுத்து தற்போது மீண்டும் நடிகை நயன்தாரா தனது சினிமா பணிகளை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் காட்ஃபாதர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை நயன்தாரா இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

முன்னதாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்த GOLD திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று செப்டம்பர் 8-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதனிடையே மாயா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் கனெக்ட்.

ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் கனெக்ட் திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ்,ஹனியா நஃபீஸா மற்றும் அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள கனெக்ட் திரைப்படத்திற்கு மணிகண்டன் ராமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய, பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  

இந்நிலையில் கனெக்ட் திரைப்படத்தின் அனைத்து இறுதிக் கட்டப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகிள்ளது. முற்றிலும் நிறைவடைந்த கனெக்ட் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தோடு, இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ… 
 

Thank U @Ashwin_saravana for an extraordinary horror movie
We know u r good at it😱 but u jus meratified us more than expected😌kudos to U & ur stunning team😇

Very good performances frm #LadySuperStar #Nayanthara #SathyaRaj sir @AnupamPKher & the entire cast #HappyOnam indeed😇 pic.twitter.com/3vLvhChGKF

— Vignesh Shivan (@VigneshShivN) September 8, 2022