தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளின் பட்டியலில் இணைந்திருக்கும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெருங்கிய வட்டாரத்தோடு கோலாகலமாக நடைபெற்றது. திரை உலகைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

இயக்குனர் மணிரத்னத்தின் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தற்போது குறிப்பிடப்படும் நடிகராக வளர்ந்திருக்கும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் தற்போது ஆகஸ்ட் 16 1947 திரைப்படம் தயாராகி வருகிறது. முன்னதாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகிறது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மஞ்சிமா மோகன், தேவராட்டம் திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்த சமயத்தில் இருந்து இருவரும் காதலிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு இருவரும் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தொடர்ந்து திருமண தேதியையும் தெரிவித்தனர். இதனை அடுத்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் சிறப்பாக நடைபெற காரணமாய் அமைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் தங்களது புதிய திருமண புகைப்படங்களை பதிவிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Manjima Mohan (@manjimamohan)