நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகனான நடிகர் கௌதம் கார்த்திக் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர்.

அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார். மேலும் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்திலும் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இருவரும் தங்களது காதலை உறுதிப்படுத்தி தங்களது சமூக வலைதளங்களில் வாயிலாக அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து சத்ரியன், துக்ளக் தர்பார், FIR உள்ளிட்டா பல படங்களில் நடித்துள்ள நடிகை மஞ்சிமா மோகன் தேவராட்டம் திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்துள்ளார்.

அந்த சமயத்தில் இருந்தே இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இருவரும் தங்களது காதலை உறுதி செய்துள்ளதால் திரை பிரபலங்களும் ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மஞ்சிமா மோகன் உடனான தனது இந்த காதல் குறித்து மிகவும் அழகாக பதிவிட்டு மஞ்சிமா உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கௌதம் கார்த்திக்கின் அந்த பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)