தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஹே சினாமிகா. நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த ஹே சினாமிகா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் உமா மற்றும் தமிழில் கருங்காப்பியம் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.

முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார். இதனிடையே காஜல் அகர்வால் நடிப்பில் ஹாரர் காமெடி திரைப்படமாக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது கோஸ்டி.

குலேபகாவலி & ஜாக்பாட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் கோஸ்டி திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, ஊர்வசி, மனோபாலா, ஆடுகளம் நரேன், சத்தியன், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, சந்தான பாரதி, லிவின்ஸ்டன், மதன் பாபு உள்ளிட்ட நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். 

இவர்களுடன் நடிகை ராதிகா சரத்குமார் முக்கியமான கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். SEED PICTURES நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கோஸ்டி திரைப்படத்திற்கு ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள கோஸ்டி திரைப்படத்தின் கலக்கலான டீசர் சற்று முன்பு வெளியானது. கலகலப்பான அந்த டீசர் இதோ…