தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்த இயக்குனர் சுந்தர்.C தொடர்ந்து நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் வல்லான் தலைநகரம் 2 ஒன் 2 ஒன் ஆகிய படங்கள் சுந்தர்.C நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் பக்கா எண்டர்டைனிங் திரைப்படங்களை வழங்கி வரும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் காஃபி வித் காதல். கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.C - ஜீவா - ஜெய் கூட்டணி இணைந்துள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

ரொமான்டிக் காமெடி என்ட்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகியிருக்கும் காஃபி வித் காதல் திரைப்படத்தில் ஜீவா , ஜெய் உடன் இணைந்து DD-திவ்யதர்ஷினி, ஸ்ரீகாந்த், அமிர்தா, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், சம்யுக்தா சண்முகநாதன், ஐஸ்வர்யா தத்தா, ரெட்டின் கிங்ஸ்லி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, ஃபெண்ணி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ள, காஃபி வித் காதல் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் காஃபி வித் காதல் திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஃபி வித் காதல் திரைப்படத்திலிருந்து கலகலப்பான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஜாலியான அந்த புரோமோ வீடியோ இதோ…