தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தன்னிகரற்ற ஹீரோவாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அஜித் குமாருடன் இணைந்து மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி மற்றும் ராஜதந்திரம் வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற 2023 ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக துணிவு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. மேலும் அதே பொங்கல் வெளியிடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸாக இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே தொடர்ந்து தனது பைக் ரைடிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார். அந்த வகையில் தற்போது பூனேவில் அஜித்குமார் பைக் ரைடங்கில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பூனேவில் பைக் ரைடிங் செய்யும் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

#pune ride #ak #ajith pic.twitter.com/OesnLTCtDl

— Suprej Venkat (@suprej) October 31, 2022