தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தங்களது 22 ஆவது திரைப்படமாக தயாரிக்கும் லவ் டுடே திரைப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். லவ் டுடே திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.  

ரசிகர்கள் விரும்பும் பக்கா எண்டெர்டைன்மென்ட் திரைப்படமாக தயாராகியிருக்கும் லவ் டுடே திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது லவ் டுடே திரைப்படத்தின் இறுதிகட்ட மிக்சிங் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

AppLock is Locked now . Open it on 4th Nov in theatres - #LoveToday pic.twitter.com/kUTQuyTES5

— Pradeep Ranganathan (@pradeeponelife) October 30, 2022