ஹாலிவுட் நடிகை கேல் கடோட் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் வொண்டர் வுமன். இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த நடிகர் ஹிரித்திக் ரோஷன், அந்த படத்தை புகழ்ந்து பதிவு செய்திருந்தார். அதை பார்த்த ஹாலிவுட் நடிகையான கேல் கடோட், ஹிரித்திக்கிற்கு நன்றி சொல்லி ட்வீட் செய்திருப்பது சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது. இதை இந்திய திரை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

வொண்டர் வுமன் படத்தின் இரண்டாம் பாகமான வொண்டர் வுமன் 1984 திரைப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு இந்த வாரம் வெளியாகியுள்ளது. பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் வெளியான முதல் பாகம் உலகளவில் வசூல் மழையை குவித்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாகமும் வெற்றிநடை போட்டு வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐமேக்ஸ் திரையரங்கில் வொண்டர் வுமன் படத்தை நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது குடும்பத்துடன் மாஸ்க் அணிந்து கொண்டு பார்த்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் குறித்து பதிவிட்டு இருந்தார்.

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் சைல்ட்வுட் க்ரஷ் வொண்டர் வுமன் தானாம். நடிகை கேல் கடோட் நடிப்பில் வெளியாகி உள்ள வொண்டர் வுமன் 1984 படத்தை பார்த்த ஹிரித்திக் ரோஷன், ஹாலிவுட் நடிகை கேல் கடோட்டிற்கும் அவரது அற்புதமான டீமுக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் போட்ட பாராட்டு ட்வீட்டை பார்த்ததும் ஹாலிவுட் நடிகையான கேல் கடோட், நீங்க இந்த படத்தை பார்த்து மகிழ்ந்ததில் ரொம்ப சந்தோஷம், பாராட்டியதற்கு நன்றி...உங்கள் ஹாலிடேவை உற்சாகமாக கொண்டாட வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருப்பது ஒட்டுமொத்த சினிமா உலகின் கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்தியன் சூப்பர் ஹீரோவாக க்ரிஷ் படத்தில் நடித்த ஹிரித்திக் ரோஷனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிரித்திக் ரோஷன் இந்தியாவின் ஹேண்ட்ஸம் ஹங்க் என்பது ஹாலிவுட் நடிகைகளுக்கு மட்டும் என்ன தெரிந்திருக்காதா? என திரை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.