மலையாள சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஃபகத் ஃபாசில். கையெத்தும் தூரத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஃபகத் ஃபாசில் தொடர்ந்து மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது யதார்த்தமான நடிப்பால் பல மொழிகளிலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் ஃபகத் ஃபாசில். நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஃபகத் ஃபாசில் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திலும் நடித்திருந்தார். 

fahat fasil new hair style getup viral on social media

இதனிடையே நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தமிழில்  மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகர் ஃபகத் ஃபாசில்-இன் சமீபத்திய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட முடியுடன் கண்ணாடி அணிந்தபடி ஃபகத் ஃபாசில் இருக்கும் அந்த  கெட்டப் எந்த திரைப்படத்திற்காக என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

ஃபகத் ஃபாசிலின் புதிய கெட்டப் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா திரைப்படத்திற்காகவா அல்லது உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்திற்காகவா என்ற  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிப்பின் அரக்கனாக இருக்கும் ஃபகத் ஃபாசிலின் நடிப்பை இந்த இரண்டு திரைப்படங்களிலும் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.