ஹாலிவுட் சினிமாவில் பயமுறுத்தும் திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவர் ஜேம்ஸ் வேன். இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஜேம்ஸ் வேன் கதை திரைக்கதை எழுதிய திரைப்படங்களும் சரி இயக்கிய திரைப்படங்களும் சரி பார்ப்பவர்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கும். மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய திரைப்படங்கள் என்றால் SAW series ,Insidious series , Conjuring series. இந்த திகில் திரைப்படங்களில் ஒன்று இவர் இயக்கி இருப்பார் அல்லது கதை திரைக்கதை எழுதி இருப்பார் அல்லது  தயாரித்து இருப்பார். 

இதில் காஞ்சூரிங் திரைப்படம் ரசிகர்களை அதிகம்  பயப்பட வைத்து ரசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது காஞ்சுரிங் பாகம்-3 இப்போது வெளியாக உள்ளது. ஜேம்ஸ் வேன் கதை எழுதி தயாரிக்கும் இத்திரைப்படத்தை பீட்டர் சாஃப்ரான் இணைந்து தயாரிக்கிறார். டேவிட் லெஸ்லி ஜான்சன் மற்றும் மெக்கோல்ட்ரிக்  இணைந்து திரைக்கதை எழுத மைக்கேல் சாவேஸ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். வழக்கம்போல வேரா ஃபர்மிகா  மற்றும் பேட்ரிக் வில்சன் இருவரும் லாரைன் வாரன் மற்றும் எட் வாரன் கதாபாத்திரங்களில்   நடிக்கிறார்கள். 

அமானுஷ்ய சக்திகளையும்  ஆவிகளையும் மையப்படுத்திய நிஜமான ஆய்வாளர்களான லாரைன் வாரன் மற்றும் எட் வாரன் அவர்களின் வழக்குகளை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள்  தான் ஜேம்ஸ் வேனின் முக்கியமான சில திகில் திரைப்படங்கள். அந்தவகையில் காஞ்சுரிங்-3 திரைப்படமும் அமெரிக்காவில் நடந்த மிக முக்கியமான ஒரு  திகிலூட்டும் வழக்கை தழுவியே தயாராகியுள்ளது. 

THE CONJURING- THE DEVIL MADE ME TO DO IT என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் ஒரு பிரத்தியேக திகில் காட்சி YouTube-ல் வெளியாகியுள்ளது. பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த இந்த பிரத்யேக திகில் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.