கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில்,  2 வது அலையில் 270 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். இதில், தமிழகத்தில் கொரோனா 2 வது அலைக்கு 11 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை சற்று வேகம் எடுத்திருந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக மெல்ல குறையத்தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாவது சற்று ஆறுதலை தருகிறது. எனினும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சற்று முன்பு வெளியிட்டு உள்ளது.

அதன் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996 ஆக உயர்ந்து உள்ளது.

அதே போல், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 33 லட்சத்து 53 ஆயிரத்து 765 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

அத்துடன், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் கிட்டதட்ட 4 லட்சத்து 22 ஆயிரத்து 436 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 512 ஆக தற்போது உயர்ந்திருக்கிறது.

எனினும், கொரோனா தொற்றுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 329 பேர் உயிரந்து உள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கையான 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக உயர்ந்திருக்கிறது.

அதே நேரத்தில், “இந்தியாவில் கொரோனா 2 வது அலையில் இது வரை 270 மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்” என்று, இந்திய மருத்துவ சங்கம் அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2 வது அலையானது, முதல் அலையைக் காட்டிலும், மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது, கொரோனா பாதிப்பு சற்றே குறையத் தொடங்கினாலும், உயிர் இழப்புகள் சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. 

குறிப்பாக, இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் முன்கள பணியாளர்கள் தொடர்ந்து போராடி. பலரும் தங்களது உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர். இதில், சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விடுகிறார்கள்.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் பரிதாபமாக கொரோனாவுக்கு பலியானார்கள். ஆனால், தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனாவின் 2 வது அலையில் இது வரை 270 மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். 

இதில், முக்கியமாக தமிழகத்தில் மட்டும் 11 மருத்துவர்கள் இந்த 2 வது அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்கள். 

அதன் படி, “இந்தியாவிலேயே அதிக பட்சமாக பீகார் மாநிலத்தில் 78 மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்” என்று, இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

அதே போல், கடந்த 9 ஆம் தேதி 25 வயதான மருத்துவர் அனாஸ் முஜாகித் டிஜிபி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், தமிழகத்தில் கொரோனாவின் இந்த 2 வது அலைக்கு 11 மருத்துவர்கள் இது வரை பலியாகி இருக்கிறார்கள். இந்த பலி எண்ணிக்கையில், தற்போது களத்தில் உள்ள ஒட்டுமொத்த முன்கள பணியாளர்களையும் சேர்த்தால், அதன் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.