இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஃபஹத் பாசில் கடைசியாக தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து மலையாளத்தில் இவரது நடிப்பில்  மலையன்குஞ்சு திரைப்பபம் வெளிவந்தது.

முன்னதாக தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உடன் இணைந்து ஃபஹத் பாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து தெலுங்கில் கடந்த ஆண்டு (2021)பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த புஷ்பா படத்தின் 2வது பாகத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த வரிசையில் அடுத்ததாக கேஜிஎஃப் திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS தயாரிக்கும் புதிய படத்தில் ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். LUCIA & U-TURN என கவனிக்க வைத்த திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடிக்கும் இப்படத்திற்கு தூமம் என பெயரிடப்பட்டுள்ளது.கோப்ரா படத்தில் வில்லனாக நடித்த பிரபல மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ தூமம் படத்தில் நடிக்கிறார்.

ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்யவுள்ள தூமம் படத்திற்கு பூர்ணசந்திரா தேஜாஸ்வி இசையமைக்கவுள்ளார். வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் தூமம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு(2023) கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தூமம் படத்தை அறிவிக்கும் வகையில் புதிய டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

𝐖𝐡𝐚𝐭 𝐲𝐨𝐮 𝐬𝐨𝐰, 𝐬𝐨 𝐬𝐡𝐚𝐥𝐥 𝐲𝐨𝐮 𝐫𝐞𝐚𝐩.
Presenting #Dhoomam.

Kickstarting from Oct 9, 2022, End Game begins in Summer 2023.@twitfahadh #Pawan @VKiragandur @aparnabala2@hombalefilms @HombaleGroup @vjsub @Poornac38242912 #PreethaJayaraman @roshanmathew22 pic.twitter.com/5x9zXJsznj

— Hombale Films (@hombalefilms) September 30, 2022