தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் நடிகர் அஜித்குமார் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழ்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் அஜித்குமாரின் திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் திரையரங்குகளில் ரசிகர்கள் திருவிழாவே கொண்டாடுவார்கள். அதிலும் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

காரணம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் குமாரின் துணிவு திரைப்படம் & தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ஒரே நாளில் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகின்றன. தனது முந்தைய திரைப்படங்களான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தை தொடர்ந்து 3வது முறையாக போனி கபூர் தயாரித்துள்ளார்.

அதேபோல் இந்த வெற்றி கூட்டணியில் தொடர்ந்து 3வது முறை இடம் பெற்றுள்ள ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவில் தயாராகி இருக்கும் துணிவு படத்திற்கு விஜய் வேலு குட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கும் துணை படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல் கல்யாண் மாஸ்டரின் நடன இயக்கத்தில் அஜித்குமாரின் சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா பாடலின் நடனத்திற்கும் ரசிகர்கள் வெயிட்டிங்.

முன்னதாக வெளிவந்த துணிவு படத்தின் இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 3வது பாடலாக வெளிவந்துள்ளது கேங்ஸ்டா பாடல். அஜித்குமாருக்கே உரித்தான ஸ்டைலான பாடலாக வெளிவந்திருக்கும் கேங்ஸ்டா பாடல் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அட்டகாசமான அந்த பாடல் இதோ…