விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று ஈரமான ரோஜாவே.கடந்த 2018-ல் தொடங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.பவித்ரா ஜனனி இந்த தொடரின் முன்னணி நாயகியாகவும்,திரவியம் முன்னணி நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.

ஷியாம்,காயத்ரி புவனேஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான மலர் மற்றும் வெற்றி கதாபாத்திரங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்த தொடர் சமீபத்தில் 700 எபிசோடுகளை கடந்து அசத்தல் சாதனையை நிகழ்த்தியது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.பல சூப்பர்ஹிட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த இவர் திடிரென்று மரணமடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுஇவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by actorKumara Moorthi (@kumaramoorthi.l)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manikandan G (@gemini_mani)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ (@remyaa_joseph)