வேலையிலிருந்து நீக்கப்பட்ட 18 வயது சிறுவன், ஓனரின் 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டு உரிமையாளர் ஒருவர், தனது வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்வதற்கா, அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான ராகுல் என்ற இளைஞனை வேலைக்கு சேர்த்து உள்ளார்.

அப்போது, அந்த வீட்டின் உரிமையாளருக்கு மனைவி மற்றும் 14 வயதான மகள் ஒருவரும் இருந்தனர். அந்த 14 வயதான சிறுமி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

இப்படியாக, அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்த 18 வயதான ராகுல், தொடக்கத்தில் நன்றாக வேலை செய்து வந்த நிலையில், போக போக சரிவர வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. ஒரு கட்டத்தில், ராகுலின் வேலையில் திருப்தியில்லாமல் போகவே, அந்த வீட்டு உரிமையாளர் அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டார். 

இதன் காரணமாக, பணியிலிருந்து நீக்கப்பட்ட ராகுல், அந்த வீட்டு உரிமையாளரை பழி வாங்க நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார்.

அதன் படி, கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அந்த வீட்டு உரிமையாளரின் 14 வயதான மகள், வீட்டின் வெளியே இருந்த பாத்ரூமிற்கு வந்து உள்ளார்.

அப்போது, அந்த பாத்ரூமின் அருகே ராகுலும், அவனுடைய 15 வயதான கூட்டாளி சிறுவன் ஒருவரும் மறைந்திருந்து உள்ளனர். சிறுமி, அந்த பாத்ரூமிற்கு வந்த உடன், சிறிது நேரத்திலேயே ஒளிந்திருந்த அவர்கள் இருவரும் அந்த சிறுமியை அந்த பாத்ரூமில் இருந்து வாயை மூடி, அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்று உள்ளனர்.

அதன் பிறகு, அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமியை, அவர் அணிந்திருந்த துணியால் கழுத்தை நெரித்து, கொடூரமான முறையில், அந்த சிறுமியை அவர்கள் கொன்று விட்டு, சடலத்தை அங்கேயே போட்டு விட்டு அவர்கள் இருவரும் தப்பி ஓடி உள்ளனர்.

இதனையடுத்து, தங்களது மகளை காணாத பெற்றோர்கள் இருவரும், அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியை தனிப்படை அமைத்து மிகத் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, அந்த சிறுமியின் உடல் அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து போலீசார் மீட்டு உள்ளனர். 

அத்துடன், சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்த நிலையில், அந்த சிறுமியை ராகுலும், அவனது 15 வயது கூட்டாளி ஒருவனும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவர்கள் மறைந்திருந்த இடத்தை கண்டுப்பிடித்த போலீசார், இருவரையும் அதிரடியாக கைது செய்து அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு, அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.