துல்கர் சல்மானின் Pan India திரைப்படம்.. ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் அப்டேட்டினை வெளியிட்ட படக்குழு.. வீடியோ வைரல்..!

கிங் ஆஃப் கோதா பட டீசர் அப்டேட்டை கொடுத்த படக்குழு வைரல் வீடியோ உள்ளே - King of kotha teaser update video goes viral | Galatta

சம கால இந்திய திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகர்களில் முன்னணியில் வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான். காதல் நாயகனாக பல படங்களில் அறிமுகமானாலும் அதே நேரத்தில் கமர்ஷியல் மாஸ் லுக்கிலும் மிரட்டி ஜனரஞ்சக நாயகனாகவும் இருந்து வருகிறார். மலையாள திரையுலகில் இருந்து வந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் துல்கர் சல்மானுக்கு ரசிகர் ஏராளம். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பெரும்பாலும் இந்திய அளவு ரசிகர்களால் கொண்டாடப்படும். முன்னதாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் திரைப்படம் இந்தியா அளவு அனஈத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. அதே ஆண்டில் தமிழில் ஹே சினாமிகா, இந்தியில் சுப் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடதக்கது.  

தற்போது துல்கர் சல்மான் ஃபேமிலி மேன் & ஃபர்சி வெப் சீரிஸ்களின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் விரைவில் நெட்ஃபிலிக்ஸில் வெளிவர இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. 

இதனிடையே துல்கர் சல்மான் திரைபயணத்தில் மிக முக்கியமான மாறுபட்ட அதிரடி கேங்க்ஸ்டர் படமாக உருவாகும் திரைப்படம் கிங் ஆஃப் கோதா. 1980 காலக் கட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கி வருகிறார். துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ஷியாம் சசிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் பாடல்களுக்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்க, ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை சேர்த்துள்ளார்.

கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படம் துல்கர் சல்மானின் முந்தைய படங்களான ‘குருப்’, ‘சீதாராமம்’ வரிசையில் கிங் ஆஃப் கோதா திரைப்படமும் மலையாளத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் PAN INDIA படமாக ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 24 ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் .

இந்நிலையில் கிங் ஆஃப் கோதா படத்தின் டீசர் அப்டேட் குறித்த அறிவிப்பு வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களின் பெயர்களை அறிமுகப்படுத்தி அதனுடன்  டீசர் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர்.

Introducing the People of Kotha!

Brace yourself for a first glimpse Teaser into the realm of #KingofKotha releasing on June 28 at 6 pm 😎🔥#KOK @dulQuer @actorshabeer @Prasanna_actor #AbhilashJoshiy @NimishRavi @JxBe @shaanrahman @ActorGokul @ActorSarann @TheVinothCjpic.twitter.com/oK63FCKySa

— Zee Studios South (@zeestudiossouth) June 23, 2023

படத்தில் ‘டான்சிங் ரோஸ்’ சபீர் கண்ணன் என்ற கதாபாத்திரத்திலும், பிரசன்னா ஷாகுல் ஹாசன் என்ற கதாபாத்திரத்திலும் ஐஸ்வர்யா லக்ஷ்மி தாரா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் நைலா உஷா – மஞ்சு, செம்பன் வினோத் – ரஞ்சித், கோகுல் சுரேஷ் – டோனி, ஷமி திலகன் – ரவி, ஷாந்தி கிருஷ்ணா – மாலதி, ‘வடசென்னை’ சரண் – ஜின்னு, அனிகா சுரேந்தர் – ரீத்து போன்ற  கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.   மேலும் இவர்களுடன் கிங் ஆஃப் கோதாவாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். மேலும் இந்த அறிவிப்புடன் கிங் ஆஃப் கோதா பட டீசர் வரும் ஜூன் 28 ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  தற்போது படக்குழு வெளியிட்டுள்ள டீசர் அப்டேட் வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

“ரஜினி சார் ரிஷி மாதிரி அமைதியா இருப்பார்” ஜெயிலர் படபிடிப்பு அனுவம் குறித்து நடிகர் வசந்த் ரவி.. – Exclusive Interview இதோ..
சினிமா

“ரஜினி சார் ரிஷி மாதிரி அமைதியா இருப்பார்” ஜெயிலர் படபிடிப்பு அனுவம் குறித்து நடிகர் வசந்த் ரவி.. – Exclusive Interview இதோ..

“மாரி செல்வராஜ் செட் இப்படி தான் இருக்கும்..” உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ் – Exclusive Interview உள்ளே..
சினிமா

“மாரி செல்வராஜ் செட் இப்படி தான் இருக்கும்..” உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ் – Exclusive Interview உள்ளே..

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பண மோசடி.. பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.!
சினிமா

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பண மோசடி.. பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.!