'ஜாலியா இருக்கீங்க.. இந்த உலகத்துக்குள்ள வாங்க.!' என்ற மாரி செல்வராஜ்... உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட அனுபவங்கள் இதோ!

மாமன்னன் பட அனுபவங்களை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi stalin shared experience with mari selvaraj in maamannan | Galatta

முதல்முறையாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. வைகைப்புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இத்தனை பேரிடம் அனுமதி வாங்கி எடுத்துக் கொண்டிருக்கிறேன் இவர் என்னை இப்படி சாவடிக்கிறாரே என என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா? எனக் கேட்டபோது,

"அப்படியெல்லாம் கிடையவே கிடையாது.. ஆரம்பத்தில் அப்படி எல்லாம் தோணும்.. மாரி செல்வராஜை தெரியாதவர்களுக்கு, என்ன இப்படி எடுக்கிறாரே என்று.. எனக்கே அப்படி தோன்றியது. டேக் ஓகே என்பதை சொல்லவே மாட்டார். ஒன் மோர் கேட்பார் பிறகு அதை விவரிப்பார். அவரே நடித்துக் காட்டுவார். எல்லாருடைய கதாபாத்திரங்களையும் அவரே செய்வார். அது நமக்கு வரும் வரை விட மாட்டார். ஆரம்பத்தில் ஒரு ஆறு ஏழு நாள் ஷூட்டிங் இருந்தது நான் மட்டும் தான் நான் மற்றும் சில ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள். சும்மா நடந்து போங்க.. இந்த பக்கம் நடந்து வாங்க.. பைக் எடுத்துட்டு போங்க.. இப்படியேதான் எடுத்துக் கொண்டிருந்தார். காலை 9 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணி வரை. நானும் “என்ன சார் இது?” என்றால் “இல்லை இது பாடல் மாண்டேஜ்” என்றார். பின்னர் 7வது நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவரிடம் கேட்டேன், “என்ன சார் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க ஏதாவது சொல்லுங்க சார் நீங்கள் நினைக்கிற அளவுக்கு நான் ஏதாவது பண்ணி இருக்கிறேனா?” எனக் கேட்டபோது, “எனக்கு தெரியல சார் ஒரு பத்து நாள் கழித்து சொல்லட்டுமா?” என சொன்னார். அதன் பிறகு என்னை ஊருக்கு போக சொல்லி விட்டார். நான் வந்து விட்டேன். பின்னர் வடிவேலு அண்ணா படப்பிடிப்பிற்கு சென்றார். அப்போதுதான் வடிவேல் அண்ணாவை வைத்து ஒரு போர்ஷன் எடுத்தார். ஒரு 15 நாள் அதன் பிறகு நானும் கீர்த்தி சுரேஷும் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்தோம். வடிவேலு அண்ணா நடித்துக் கொண்டிருக்கிறார் எங்களுடைய காம்பினேஷன் வருகிறது. அப்போது என்னையும் கீர்த்தி சுரேஷையும் கூப்பிட்டு, “பக்கத்து ரூமில் ஒரு லேப்டாப் இருக்கிறது. அதில் நான் ஒரு 15 நாள் ஷூட் பண்ணியது இருக்கிறது. அதை கொஞ்சம் பாருங்கள்” என்றார். இல்லை “நான் முழு படம் பார்க்கிறேன்” என்றேன் “இல்ல சார் நீங்க கொஞ்சம் பாருங்க” என்றார். பின்னர் பார்த்துவிட்டு வந்து அந்த யூனிட்டில் வடிவேலு அண்ணா நின்று கொண்டிருந்தார் எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. நான் நேராக போய் அவரை கட்டிப்பிடித்துக் கொண்டேன். “என்ன அண்ணா இப்படி செய்திருக்கிறீர்கள் எங்களுக்கெல்லாம் ஒன்றுமே இல்லையே” என்றேன். அப்போதுதான் மாரி செல்வராஜ் சொன்னார், “சார் இதுதான் படத்தோட கதை இதுதான் நான் எடுக்கப் போகிறேன் இந்த உலகத்திற்குள் நீங்கள் கீர்த்தி ஃபகத் எல்லோரும் வாருங்கள்.. ரொம்ப ஜாலியா இருக்கீங்க.. தயவு செய்து இதை புரிஞ்சுக்கோங்க.. படத்தோட கதை இதுதான்” என்றார் அதன் பிறகு தான் நாங்கள் உணர்ந்தோம். இதை தான் மாரி செல்வராஜ் எதிர்பார்க்கிறார் என்று…” என உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

‘தேள் கொடுக்கு சிங்கத்த தீண்டாதப்பா... இது லியோ VS ரோலக்ஸ் தானா?’ உண்மையை உடைத்த விஷ்ணு எடவன்! ட்ரெண்டிங் வீடியோ உள்ளே
சினிமா

‘தேள் கொடுக்கு சிங்கத்த தீண்டாதப்பா... இது லியோ VS ரோலக்ஸ் தானா?’ உண்மையை உடைத்த விஷ்ணு எடவன்! ட்ரெண்டிங் வீடியோ உள்ளே

‘அவர் MINDல ஒன்னு செட் ஆயிடுச்சு!’ லியோ முடிவதற்கு முன் தளபதி 68 படத்தை விஜய் அறிவித்தது பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் பதில்! வீடியோ இதோ
சினிமா

‘அவர் MINDல ஒன்னு செட் ஆயிடுச்சு!’ லியோ முடிவதற்கு முன் தளபதி 68 படத்தை விஜய் அறிவித்தது பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் பதில்! வீடியோ இதோ

'கஸ்டடி பெருசா போகல.. ஆனா!'- வெங்கட் பிரபுவின் தளபதி68 படத்தை விஜய் தேர்ந்தெடுத்தது ஏன்? தயாரிப்பாளர் தனஜெயனின் விளக்கம் இதோ!
சினிமா

'கஸ்டடி பெருசா போகல.. ஆனா!'- வெங்கட் பிரபுவின் தளபதி68 படத்தை விஜய் தேர்ந்தெடுத்தது ஏன்? தயாரிப்பாளர் தனஜெயனின் விளக்கம் இதோ!