தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனரான சசிகுமார், நடிகராகவும் பல நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார். முன்னதாக சத்யராஜ் உடன் இணைந்து நடித்த “எம்ஜிஆர் மகன்” மற்றும் “ராஜவம்சம்” உள்ளிட்ட படங்கள் சசிகுமார் நடிப்பில் கடந்த நவம்பரில் ரிலீசானது. 

அடுத்ததாக, இயக்குனர் அனிஸ் இயக்கத்தில் “பகைவனுக்கு அருள்வாய்”, மற்றும் இயக்குனர் N.V.நிர்மல் குமார் இயக்கத்தில் “நா நா” ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதனையடுத்து  இயக்குனர் சசிகுமார் நடிக்கும் அடுத்த புதிய திரைப்படத்தின் மிரட்டலான  டைட்டில் டீசர் தற்போது வெளியானது. 

வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் சசிகுமார் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு காமன் மேன் (COMMON MAN) என பெயரிடப்பட்டுள்ளது . இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள காமன் மேன் (COMMON MAN) திரைப்படத்தில், சசிகுமார் உடன் இணைந்து ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடிக்கிறார். 

பிரபல தயாரிப்பு நிறுவனமான செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் காமன் மேன் (COMMON MAN) திரைப்படத்திற்கு  ராஜா பட்டசர்ஜி ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார். சற்று முன் வெளியாகி சமூக வலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துவரும் காமன் மேன் (COMMON MAN) படத்தின் டைட்டில் டீசர் இதோ…