தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் #Vishal33 புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் #Vishal33 திரைப்படம் Pan இந்தியா திரைப்படமாக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர்.

முன்னதாக ராணா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகும் லத்திசார்ஜ் படத்தில் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே  விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்து நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் வருகிற 2022 ஜனவரி 26ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து டிம்பிள் ஹயாத்தி, ரவீனா ரவி மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

கவின் ராஜ் ஒளிப்பதிவில் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்த்துள்ள வீரமே வாகை சூடும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.