கமல்ஹாசனின் இந்தியன் 2 - ராம்சரணின் கேம் சேஞ்சர் என பம்பரமாய் சுழலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்! மிரட்டலான ஷூட்டிங் அப்டேட் இதோ

இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்களின் ஷூட்டிங் அப்டேட் கொடுத்த ஷங்கர்,director shankar shared shooting update of indian 2 and game changer | Galatta

இந்திய சினிமாவில் பல பிரமாண்ட படைப்புகளை கொடுத்த இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 & கேம்ஸ் சேஞ்சர் என ஒரே சமயத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றன. கடந்த 1996 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த இந்தியன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, தற்போது 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் இயக்குனர் ஷங்கர் முதல் முறை நேரடி தெலுங்கு திரைப்படமாக இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதையில், பாடலாசிரியர் விவேக் மற்றும் மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அவர்கள் இணைந்து வசனங்களை எழுதி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு திரு மற்றும் ரத்னவேலு இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்ய, தமன் இசை அமைக்கிறார். ராம்சரண் உடன் இணைந்து கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரகனி, நவீன் சந்திரா, நாசர் உள்ளிட்ட பலர் கேம் சேஞ்சர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒரே சமயத்தில் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் கையாண்டு வரும் இயக்குனர் ஷங்கர் தற்போது அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று மே 9ம் தேதி கேம் சேஞ்சர் படப்பிடிப்பை முடித்த கையோடு இன்று மே 10ம் தேதி இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை ஷங்கர் தொடங்கி இருக்கிறார். இதனை அறிவிக்கும் வகையில், “கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் ஷங்கர், “கேம் சேஞ்சர் படத்தின் மிரட்டலான க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு இன்று முடிந்தது. நாளை முதல் இந்தியன் 2 பட SILVER BULLET SEQUENCE…” எனக் குறிப்பிட்டு தனது Twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இன்னும் இதர அதிரடியான அறிவிப்புகள் வரும் நாட்களில் தொடர்ச்சியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஷங்கரின் அந்தப் ட்விட்டர் பதிவு இதோ…
 

Wrapped up #GameChanger ‘s electrifying climax today! Focus shift to #Indian2 ‘s silver bullet sequence from tomorrow! pic.twitter.com/HDUShMzNet

— Shankar Shanmugham (@shankarshanmugh) May 9, 2023

சினிமா

"இந்த பிச்சைக்காரன HANDLE பண்றது கஷ்டமா இருந்ததுசு!"- பார்ட் 1க்கும்- 2க்கும் என்ன வித்தியாசம்?ரகசியங்களை உடைத்த விஜய் ஆண்டனி! வைரல் வீடியோ

சினிமா

"விஜய் ஆண்டனி எதற்கு பயப்படுவார்?"- கலாட்டா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சுவாரஸ்யமான பதில்! ஸ்பெஷல் வீடியோ இதோ

ராம அவதாரத்தில் பிரபாஸின் ஆதிபுரூஷ்... பிரம்மாண்டமான புது வடிவில் ராமாயணம்! அட்டகாசமான ட்ரெய்லர் இதோ
சினிமா

ராம அவதாரத்தில் பிரபாஸின் ஆதிபுரூஷ்... பிரம்மாண்டமான புது வடிவில் ராமாயணம்! அட்டகாசமான ட்ரெய்லர் இதோ