சுப்ரமணியபுரம், காதல் படமெல்லாம் Miss ஆனதுக்கு அப்பாதான் காரணமா? – உண்மையை உடைத்த சாந்தனு பாக்யராஜ் – முழு வீடியோ இதோ..

தவறவிட்ட படங்கள் குறித்து மனம் திறந்த சாந்தனு பாக்யாராஜ் முழு வீடியோ இதோ - Shanthnu Bhagyaraj about his missed films | Galatta

‘மதயானை கூட்டம்’ திரைப்பட இயக்குனர் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் வித்யாசமான கதைக்களத்தில் உருவான திரைப்படம் ‘இராவண கோட்டம்’. தயாரிப்பாளர் கண்ணா தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஹீரோவாக சாந்தனு நடிக்க அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இராவண கோட்டம் படத்திற்கு தனி எதிர்பார்ப்பை உருவாக்கியது. அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளுடன் கிராம பின்னணியில் உருவான இப்படம் குறித்து அப்படத்தின் நாயகன் சாந்தனு, நாயகி கயல் ஆனந்தி மற்றும் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர். இதில் நடிகர் சாந்தனு அவரது திரைப்பயணத்தில் தவறவிட்ட படங்கள் குறித்து கேட்கையில் அவர்,

“ என்னோட முதல் படமான ‘சக்கரக்கட்டி’ படம் ரிலீஸ் ஆனதுக்கப்றம் நான் என்னெல்லாம் ஆகனும் னு நினைச்சனோ அப்படி ஆகல.. சில வருஷங்களில் சில முக்கியமான படங்கள் நான் மிஸ் பண்ணேன்.. சுப்பிரமணியபுரம். காதல் படங்களை நான் தவறவிட்டேன்.. அது எப்படி வந்து முடிஞ்சிது னா  எங்க அப்பா தான் என் வாழ்க்கைய கெடுத்தாரு.. கதை சரியில்லைனு வேண்டாம் னு சொல்லிட்டாரு னு.. தவறா பேச ஆரம்பிச்சிட்டாங்க.. நிறைய விமர்சனம் தவறா வர ஆரம்பிச்சிது.. நான் 100 தடவ திருப்பி திருப்பி சொல்லிட்டேன்.. அது முற்றிலும் பொய்யானது. என்னோட சூழ்நிலையால அந்த படங்கள் பண்ண முடியாம ஆயிடுச்சு..  அது மிஸ் பண்ணதுக்கு நானும் எங்க அப்பாவும் இன்னிக்கு வரைக்கும் கவலை படுறோம்.. எந்தவொரு அப்பாவும் பையனுக்கு கெடுதல் பண்ணனும் னு நினைக்க மாட்டாங்க.. நல்லது பண்ணனும் னு நினைச்சார் அவர்..  அப்பா மீது தவறான குற்றசாட்டு வரும்போது நான் என்ன நினைச்சேன்னா.. எதாவது தவறு நடந்தா நம்மள மட்டுமல்ல நம்மள சுத்தி இருக்க குடும்பமும் விமர்சனத்துக்குள்ள வருவாங்க.. அதுக்கப்புறம் அப்பா நான் கதை பண்ணலாமா னு ஆலோசனை கேட்டாலும் நீயே பாத்துக்கோ னு சொல்லிடுவாரு.. இதுக்கு காரணம் அந்த விமர்சனங்கள் தான்..நான் சுப்ரமணியபுரம், காதல் பண்ணாததுக்கு காரணம் சூழ்நிலைதான்.. அந்த படங்களில் சம்மந்தப்பட்ட குழுவுக்கு இது பற்றி நல்லாவே தெரியும்.. நான் விளக்கம் சொல்லிருந்தாலும் சிலர் விமர்சனம் சொல்லிட்டு தான் இருக்காங்க... தப்பு சொல்றவங்கள திருத்த முடியாது.” என்றார் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.

மேலும் இராவண கோட்டம் படக்குழுவினர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட வீடியோவை காண..

மெர்சலான லுக்கில் ஷாருக் கான்..! அட்லீ இயக்கும் ‘ஜவான்’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு -  வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

மெர்சலான லுக்கில் ஷாருக் கான்..! அட்லீ இயக்கும் ‘ஜவான்’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு - வைரலாகும் Glimpse இதோ..

‘பத்து தல’ பட இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்.. அட்டகாசமான அறிவிப்பை பகிர்ந்த ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

‘பத்து தல’ பட இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்.. அட்டகாசமான அறிவிப்பை பகிர்ந்த ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் அறிவிப்பு இதோ..

பொன்னியின் செல்வன், ஜப்பான் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம்.. – தயாரிப்பாளர் கொடுத்த அட்டகாசமான அப்டேட்.. Exclusive interview இதோ..
சினிமா

பொன்னியின் செல்வன், ஜப்பான் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம்.. – தயாரிப்பாளர் கொடுத்த அட்டகாசமான அப்டேட்.. Exclusive interview இதோ..